இந்திய மண்ணின் புதிய மைந்தனாக – சச்சின், விராட், ரோஹித்தை மிஞ்சிய கில் வரலாற்று சாதனை.. கெய்ல், தோனி சாதனையும் சமன்

Shubman Gill Record 2.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா இதுவரை நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் காண்பித்துள்ளது. அதிலும் ரோகித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் ராகுல் தலைமையில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய அணி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறியுள்ளது.

அந்த வகையில் ஆசிய கோப்பையை வென்ற கையுடன் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையை வெல்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை உலக அணிகளுக்கு இந்தியா காண்பித்துள்ளது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளில் இளம் துவக்க வீரர் சுப்மன் கில் முதல் போட்டியில் 74 ரன்களும் 2வது போட்டியில் சதமடித்து 104 ரன்களும் விளாசி முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

இந்திய மண்ணின் மைந்தன்:
2018 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக மறக்க முடியாத 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அவர் கடந்த 2 ஐபிஎல் தொடரிலும் பெரிய ரன்களை குவித்து குஜராத் அணியின் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

அதே போல இந்தியாவுக்காகவும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் பேட்டிங் துறையின் அடுத்த முதுகெலும்பு வீரராக ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். அதற்கு மற்றொரு சான்றாக இந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 116 ரன்கள் அடித்த அவர் பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 208 ரன்கள் விளாசி இந்தூரில் 112 ரன்கள் குவித்திருந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் அதே இந்தூர் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 104 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் வருடத்தில் இந்திய மண்ணில் 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1996இல் சச்சின் டெண்டுல்கர் 2017இல் விராட் கோலி 2017இல் ரோகித் சர்மா 2018இல் மீண்டும் விராட் கோலி ஆகியோர் இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக தலா 3 சதங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: IND vs AUS : இந்திய அணியில் இருந்து வெளியேறிய பும்ரா. இதெல்லாம் ஒரு காரணமா? – மாற்று வீரர் அணியில் சேர்ப்பு

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட இந்திய மைதானத்தில் 2 சதங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில், எம்எஸ் தோனி ஆகியோரது ஆல் டைம் சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். தற்போது கில் இந்தூர் மைதானத்தில் இந்த வருடம் 2 சதங்கள் அடித்தது போல 2006ஆம் ஆண்டு நாக்பூரில் கிறிஸ் கெயில் மற்றும் 2009இல் ஜெய்ப்பூர் மைதானத்தில் எம்எஸ் தோனி தலா 2 சதங்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement