IND vs AUS : இந்திய அணியில் இருந்து வெளியேறிய பும்ரா. இதெல்லாம் ஒரு காரணமா? – மாற்று வீரர் அணியில் சேர்ப்பு

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக பெரும்பாலான தொடர்களை தவற விட்டார். அவர் இல்லாத சமயத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி, டி20 உலக கோப்பை என பல முக்கிய தொடர்களில் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரின் போது கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார்.

அந்த அயர்லாந்து தொடரிலேயே தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்த பும்ரா அடுத்ததாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்வரும் 50 ஓவர் உலககோப்பை தொடரிலும் அசத்துவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் எழந்துள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் இடம் பிடித்திருந்தார்.

இந்த தொடரில் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அதே பார்முடன் உலக கோப்பை தொடருக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் மட்டுமே விளையாடிய பும்ரா இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

அதோடு எதிர்வரும் மூன்றாவது போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளது அனைவரது மத்தியிலும் வருதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் ஏன் இந்த ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறினார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : சுப்மன் கில் சதமடிக்கும் போது அவரது காதலியின் பெயரை சொல்லி கத்திய ரசிகர்கள் – மைதானத்தில் உண்டான சத்தம்

அதன்படி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காகவே பும்ரா தற்போது அணியில் இருந்து வெளியேறியுள்ளார் என்றும் உலகக்கோப்பை தொடரானது கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெறும் என்பதனால் அதற்கு முன்னதாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவே அவர் இந்திய அணியில் இருந்து விலகி உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் தான் அவருக்கு முதல் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement