IND vs AUS : சுப்மன் கில் சதமடிக்கும் போது அவரது காதலியின் பெயரை சொல்லி கத்திய ரசிகர்கள் – மைதானத்தில் உண்டான சத்தம்

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று இந்தூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக விளையாடிய இந்திய அணி நட்சத்திர துவக்க வீரரான சுப்மன் கில் 97 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 104 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான பேட்டிங் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வரும் வேளையில் நேற்று அவர் சதம் அடிக்கும் போது மைதானத்தில் இருந்து ரசிகர்கள் எழுப்பிய ஒரு பெயர் தற்போது அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான சச்சினின் மகள் சாரா டெண்டுல்கரும் சுப்மன் கில்லும் காதலித்து வருகிறார்கள் என்றும் அடிக்கடி இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டு வரும் வேளையில் நேற்று அவர் சதம் அடிக்கும் முன்னர் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சாராவின் பெயரை சத்தமாக கத்தியுள்ளனர்.

- Advertisement -

அதோடு சுப்மன் கில் சதம் அடித்ததும் அவரது பெயரை கூறியே அந்த சதத்தை கொண்டாடியுள்ளனர். மேலும் சாரா டெண்டுல்கரின் பெயரை சத்தமாக எழுப்பி சுப்மன் கில்-க்கு ரசிகர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க : IND vs AUS : 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 2 வீரர்களுக்கு ஓய்வு – முக்கிய வீரர்கள் சேர்ப்பு

இப்படி தொடர்ச்சியாக சச்சினின் மகள் சாராவுடன் சுப்மன் கில் காதலில் இருப்பதாக பேசப்பட்டு வரும் வேளையில் இதுகுறித்து அவர்கள் இருவரின் தரப்பிலும் எந்த ஒரு தகவலும் உறுதி செய்யப்படவில்லை. அதோடு சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் ஆகியோரது காதல் விவகாரத்தில் அவர்களாக முன்வந்து ஏதாவது கூறினால் மட்டுமே இந்த விவகாரத்தில் உண்மை வெளியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement