IND vs AUS : 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 2 வீரர்களுக்கு ஓய்வு – முக்கிய வீரர்கள் சேர்ப்பு

IND
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ள வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் நாளை மறுதினம் செப்டம்பர் 27-ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நடைபெற உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்க்கு முன்பாக நடைபெற இருக்கும் கடைசிப் போட்டி என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் மீண்டும் அணியில் இணைவதால் இந்த போட்டியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அந்த வகையில் இந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொடரின் இரண்டு போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் சிறப்பான ஃபார்மில் இருந்தாலும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : ஏசியன் கேம்ஸ் : 24 பந்துகள்.. வெறும் 6 ரன்.. இலங்கையை முடித்த இளம் வீராங்கனை – கம்மி ரன்னை வைத்தே இந்தியா தங்கம் வென்றது எப்படி?

அதேபோன்று ஷர்துல் தாகூரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட இருப்பதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement