ஏசியன் கேம்ஸ் : 24 பந்துகள்.. வெறும் 6 ரன்.. இலங்கையை முடித்த இளம் வீராங்கனை – கம்மி ரன்னை வைத்தே இந்தியா தங்கம் வென்றது எப்படி?

IND vs SL Womens
- Advertisement -

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஐசிசி தரவரிசையில் டாப் இடத்தில் இருப்பதால் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று மலேசியாவை தோற்கடித்த இந்திய மகளிரணி செமி ஃபைனலில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து தங்கப் பதக்கத்தை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 25ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30 மணிக்கு நடைபெற்றது.

ஹங்கொழு நகரில் நடைபெற்ற அப்போட்டியில் தடையிலிருந்து திரும்ப வந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அந்தப் போட்டியில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா 9 (15) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த ஜெமிமாவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிதானமாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 46 (45) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

தங்கம் வென்ற இந்தியா:
ஆனால் மீண்டும் அடுத்ததாக வந்த ரிச்சா கோஸ் 9, ஹர்மன்ப்ரீத் கௌர் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் போராடிய ஜெமிமாவும் 42 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவர்களில் கடுமையாக போராடி இந்தியா 116/7 ரன்கள் மட்டும் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக ரணவீரா, பிரபோதானி, சுகந்திகா குமாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 117 என்ற சுலபமான இலக்கை துரத்திய இலங்கைக்கு இளம் இந்திய வீராங்கனை டைட்டாஸ் சாது ஆரம்பத்திலேயே சுழலில் பெரிய சவாலை கொடுத்து அனுஷ்கா சஞ்சீவினி 1, குணரத்னே 0 ஆகிய ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினார். அதை விட இலங்கை பேட்டிங் துறையின் முதுகெலும்பான கேப்டன் சமாரி அத்தப்பட்டுவையும் 12 (12) ரன்களில் அவுட்டாக்கிய அவர் ஆரம்பத்திலேயே போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்.

- Advertisement -

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மிடில் ஆர்டரில் ஹாசினி பெரேரா 25, நிலாக்ஸி டீ சில்வா 23, ரணசிங்கே 19 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீராங்கனைகளும் அதிரடி காட்ட தவறியதால் 20 ஓவர்களில் இலங்கை 97/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் காரணமாக 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டின் சாம்பியன் பட்டத்தை வென்று தங்கப்பதக்கத்தை முத்தமிட்டது.

இதையும் படிங்க: 194.59 ஸ்ட்ரைக் ரேட்.. ஆஸிக்கு எதிராக கிங் கோலியின் மாஸ் சாதனையை உடைத்த சூரியகுமார் – ஜஹீர், ரோஹித்தின் சாதனை சமன்

இந்த வெற்றிக்கு ராஜேஸ்வரி கைக்வாட் 2, தீப்தி சர்மா, பூஜா வஸ்திரகர், தேவிகா வைத்யா தலா 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றினர். ஆனால் அவர்களை விட 4 ஓவர்களில் 24 பந்துகள் வீசிய டைட்டஸ் சாது 1 மெய்டன் உட்பட வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை 1.50 என்ற அற்புதமான எகனாமியில் எடுத்து இலங்கையை வீழ்த்தி இந்தியாவின் மூவர்ண கொடியை பறக்க விட்டு தங்கப்பதக்கத்தை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதே சமயம் இலங்கை வெள்ளி பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement