விராட் கோலி, ரெய்னா இடத்துல அசத்துன.. அவர் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டாரா வருவாரு.. அஸ்வின்

Ravichandran Ashwin 3
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறியது. மேலும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்த இந்தியா சொந்த மண்ணில் 12 வருடங்களாக ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய சாதனையை தக்க வைத்துக் கொண்டது.

இந்த தொடரில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இந்தியா வெற்றி பெறுவதற்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்கள் முக்கிய பங்காற்றினர். குறிப்பாக 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 712 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
அதே போல சச்சின், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று கருதப்படும் சுப்மன் கில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். இந்நிலையில் இந்த தொடரில் ஃபீல்டிங் துறையில் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற மகத்தான வீரர்கள் நிற்கக்கூடிய ஷார்ட் மிட் விக்கெட் திசையில் நின்று சுப்மன் கில் அசத்தலாக செயல்பட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

மேலும் பேட்டிங் துறையிலும் அசத்திய அவர் இந்திய பேட்டிங் துறையின் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று பாராட்டும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஷார்ட் மிட் விக்கெட் விராட் கோலியின் இடமாகும். அவருடைய இடத்தை நிரப்புவது மிகவும் கடினமாகும். அங்கே விராட் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டவர்கள். முதல் போட்டியில் சுப்மன் கில் மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டார்”

- Advertisement -

“ஆனால் கடைசிப் போட்டியின் போது அவர் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். பென் டக்கெட் கொடுத்த கேட்ச்சை அவர் கவர்ஸ் திசையில் அபாரமாக பிடித்தார். அது ஒவ்வொரு நாளும் தன்னுடைய அடிப்படை ஆட்டத்தை முன்னேற்றும் நோக்கத்துடன் அவர் உழைப்பதை காண்பிக்கிறது. இந்த நேரத்தில் சுப்மன் கில்லுக்கு நான் எக்ஸ்ட்ரா பாராட்டை கொடுக்க விரும்புகிறேன். ஏனெனில் அவர் மேடு பள்ளங்களை சந்தித்து வருகிறார்”

இதையும் படிங்க: இத்தனை வருஷம் விளையாடியும் எந்தவொரு முன்னேற்றமும் இல்ல.. என் அம்மா இப்படித்தான் சொல்வாங்க – அஷ்வின் பகிர்வு

“தன்னுடைய பேட்டிங்கில் சில டெக்னிக்கல் தவறை கொண்டிருந்த அவருடைய இடத்தைப் பற்றி சிலர் விமர்சித்தனர். இருப்பினும் அதையெல்லாம் தாண்டி நெருப்பிலிருந்தும் நீரிலிருந்தும் தங்கம் எப்படி உருக்கப்படுகிறதோ அது போல அவர் இன்று வந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டிய ஒருவருக்கு ரசிகர்கள் திட்டமிடுவது போல அவருக்கு இது முக்கியமான பயணம். எனவே அழுத்தத்தை சமாளித்து அசத்திய அவருக்கு மிகப்பெரிய கைத்தட்டல்” என்று கூறினார்.

Advertisement