இத்தனை வருஷம் விளையாடியும் எந்தவொரு முன்னேற்றமும் இல்ல.. என் அம்மா இப்படித்தான் சொல்வாங்க – அஷ்வின் பகிர்வு

Ashwin
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தரம்சாலா நகரில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரையும் நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ரவிச்சந்திரன் அஷ்வினும் இருந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியின் போது மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்த அவர் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

அதோடு இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளை சாய்த்து இருந்தார். குறிப்பாக 25.4 ஓவர்கள் வீசிய அஷ்வின் 128 ரன்களை கொடுத்து ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்த கணக்கீடு மூலம் ஒரு விசித்திரமான நிகழ்வு அஸ்வினுக்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது 2011-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தான் அறிமுகமான டெஸ்ட் போட்டியின் போது சரியாக 128 ரன்கள் கொடுத்து ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோன்று தற்போது நூறாவது போட்டியிலும் 128 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இப்படி நடப்பது அபூர்வமான ஒரு நிகழ்வு தான். அது குறித்த தகவல் இணையத்தில் ஒரு புகைப்படமாக வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அஸ்வின் கிண்டலாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : “இத்தனை ஆண்டுகள் விளையாடியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை” என் அம்மா மட்டுமே இப்படி சொல்வாங்க.. அதே போன்று இந்த சாதனையும் இருக்கிறது என அஸ்வின் கிண்டலாக பகிர்ந்துதுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement