2019 உ.கோ தொடரில் ரோஹித் செஞ்சதை இம்முறை அவர் செய்வாரு.. இளம் வீரருக்கு வாழ்த்துடன்.. பாராட்டிய சுரேஷ் ரெய்னா

Suresh Raina
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. அந்த வரிசையில் 2023 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர சீனியர் வீரர்கள் நல்ல ரன்களை குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி சிறப்பான ஃபார்மில் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது.

அதே போல சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 3 வகையான தொடர்களிலும் தடுமாறிய சுப்மன் கில் இந்த ஆசிய கோப்பையில் முதல் போட்டியை தவிர்த்து ஏனைய அனைத்து போட்டிகளிலும் பெரிய ரன்கள் குவித்து சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட தனி ஒருவனாக 121 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

- Advertisement -

ரெய்னா பாராட்டு:
ஏனெனில் 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர்நாயகன் விருது வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் மறக்க முடியாத 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அதே வேகத்தில் 2022 ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு பெரிய ரன்கள் குவித்த அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் சதங்கள் அடித்து சச்சின், விராட் கோலி வரிசையில் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார்.

இந்நிலையில் நல்ல திறமையுடைய கில் 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து 648 ரன்கள் குவித்து அசத்திய ரோகித் சர்மாவை போல இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலக கோப்பையில் அசத்துவார் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த விராட் கோலியாகவும் அவர் வருவார் என்று உறுதியாக தெரிவிக்கும் ரெய்னா இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்ருமாறு.

- Advertisement -

“உலக கோப்பையில் அவர் முக்கியமான வீரர். மேலும் அவர் அடுத்த சூப்பர் ஸ்டாராகவும் விராட் கோலியாகவும் வருவதற்கு விரும்புகிறார் என்பதை நான் அறிவேன். அந்த அந்தஸ்தை இப்போதே ஓரளவு பெற்றுள்ள அவர் உலக கோப்பைக்கு பின் இன்னும் அதிகமாக பேசப்படுவார். ஏனெனில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவருடைய கை நகரும் வேகம் வலுவாக இருக்கிறது. அவருக்கு எதிராக ஸ்பின்னர்கள் எங்கே வீசுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்”

இதையும் படிங்க: கஷ்டமா தான் இருக்கு.. 55 சராசரி வெச்சுருந்தும் சாம்சனுக்கு சான்ஸ் கிடைக்காத காரணம் அது தான் – ஹர்பஜன் ஏமாற்றமான பேச்சு

“அதே போல வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்யாமல் போனால் அவர் சிறப்பாக அடித்து விடுவார். எனவே எங்கேயும் நிறுத்தாத மனநிலையை கொண்டுள்ள அவர் 2019 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா செய்ததை இந்த வருடம் இந்தியாவுக்காக செய்யலாம். ஏனெனில் 50 ஓவர் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். மேலும் பிறப்பிலேயே தலைவராக செயல்படும் தன்மையை அவர் கொண்டிருப்பதையும் இதுவரை விளையாடியதில் காட்டியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement