கஷ்டமா தான் இருக்கு.. 55 சராசரி வெச்சுருந்தும் சாம்சனுக்கு சான்ஸ் கிடைக்காத காரணம் அது தான் – ஹர்பஜன் ஏமாற்றமான பேச்சு

harbhajan Singh 2
- Advertisement -

கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைக்காதது கடந்த பல வருடங்களாகவே விவாத பொருளாக இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமாகி 2019இல் 2வது போட்டியை விளையாடிய அவலத்தை சந்தித்த அவர் 2021 வரை நிலையான வாய்ப்புகளைப் பெறவில்லை. குறிப்பாக சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் ரிசப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோருக்கு கிடைத்த தொடர்ச்சியான வாய்ப்புகள் அவருக்கு எப்போதுமே கிடைத்ததில்லை எனலாம்.

அதனால் முதலில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வாய்ப்பு கொடுங்கள் என்று அவருக்கு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்த நிலையில் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடிய அவர் 2022ஆம் ஆண்டு கிடைத்த வாய்ப்புகளில் முதல் முறையாக அரை சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். இருப்பினும் தொடர்ந்து வாய்ப்புகளை பெறாத அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் அரை சதமடித்து நன்றாகவே செயல்பட்டார்.

- Advertisement -

ஹர்பஜன் ஏமாற்றம்:
ஆனாலும் டி20 தொடரில் சுமாராக செயல்பட்டதால் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கான அணியில் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் கண்டுகொள்ளவில்லை. மறுபுறம் 55.71 என்ற சிறப்பான சராசரியை கொண்டிருந்தும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை விட 24.4 என்ற மோசமான சராசரியுடன் எப்போதுமே சிறப்பாக செயல்படாத சூரியகுமார் யாதவுக்கு ஆசிய மற்றும் உலகக்கோப்பை அணியில் நேரடியாக வாய்ப்பு கிடைத்துள்ளது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் கேஎல் ராகுல், இசான் கிசான் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் ஏற்கனவே இருப்பதன் காரணமாகவே 55க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டிருந்தும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் ஏமாற்றமான நிதர்சனத்தை பேசியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுவது நிறைய விவாதங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் 55 என்ற சராசரியை கொண்டிருந்தும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது நிச்சயமாக வேடிக்கையான விஷயமாகும். இருப்பினும் கேஎல் ராகுல் மற்றும் இசான் கிசான் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் இருப்பதாலேயே சஞ்சு தேர்வு செய்யப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே அவர் தம்முடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: சச்சினின் சாதனையை பாதுகாக்கவா.. ஆஸி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? ரசிகர்களுக்கு டிராவிட் பதில்

“அதை ஏற்றுக்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். ஆனால் இப்போதும் நல்ல வயதை கொண்டிருக்கும் அவர் கடினமாக உழைத்து தன்னுடைய நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். ராகுல் – சஞ்சு ஆகிய இருவரிடையே ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் ராகுலை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் 4, 5வது இடத்தில் விளையாடும் வளைவு தன்மையை ஏற்படுத்துவார். சஞ்சுவும் சிக்சர்களை அடிக்கக்கூடிய திறமையை கொண்டிருந்தாலும் ஒரே அணியில் 3 கீப்பர்கள் இருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement