சச்சினின் சாதனையை பாதுகாக்கவா.. ஆஸி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? ரசிகர்களுக்கு டிராவிட் பதில்

Rahul Dravid 2
- Advertisement -

ஆசிய கோப்பையை வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்த இந்திய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. விரைவில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் உலகின் டாப் 2 அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இத்தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் உலகக் கோப்பைக்கு முன்பாக தங்களுடைய அணியில் இருக்கும் ஓரிரு குறைகளை நிறையாக்குவதற்கான வேலைகளை இத்தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் செய்ய உள்ளன என்றே சொல்லலாம். குறிப்பாக இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவுக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டிராவிட் பதில்:
அதே போல் ஆஃப் ஸ்பின்னர் குறையை போக்குவதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் வாய்ப்பு பெறுவதற்காக தயாராகியுள்ளார். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பட் கமின்ஸ், ஸ்மித் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து இத்தொடரில் களமிறங்கி ஃபார்மை மீட்டெடுக்க முயற்சிக்க உள்ளனர். முன்னதாக தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 47 சதங்களை அடித்துள்ளார்.

எனவே 49 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை விரைவில் முந்துவார் என்று எதிர்பார்க்கப்பஸடும் அவருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டது விராட் கோலி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதனால் மும்பையைச் சேர்ந்த சச்சின் சாதனையை பாதுகாப்பதற்காக மும்பையை சேர்ந்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வேண்டுமென்றே விராட் கோலிக்கு அடிக்கடி ஓய்வு கொடுப்பதாக அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் விராட் மற்றும் ரோஹித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். குறிப்பாக இது பற்றி அவர்களிடம் விவாதித்து தான் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி முதல் போட்டிக்கு முன் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: IND vs AUS : சிராஜ் நம்பர் ஒன் பவுலரா இருந்தா எங்களுக்கு என்ன.. எந்த கவலையும் இல்ல.. சவாலை ஆரம்பித்த ஆஸி கேப்டன் பட் கமின்ஸ்

“விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுப்பது பற்றி அவர்களிடம் ஒன்றாக கலந்து பேசிய பின்பே முடிவெடுத்தோம். ஏனெனில் உலகக்கோப்பையில் முக்கிய வீரர்களான அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை ஒரு அணியாக நாங்கள் விரும்புகிறோம். அதனால் தான் முதலிரண்டு போட்டியில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது” என்று ரசிகர்களின் கண்மூடித்தனமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

Advertisement