IPL 2023 : விராட் கோலியின் 973 ரன்கள் சாதனையை அவரால் மட்டும் தான் உடைக்க முடியும் – இளம் இந்திய வீரர் மீது சாஸ்திரி நம்பிக்கை

Ravi-Shastri
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதன் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இம்முறை நல்ல ஃபார்மில் விளையாடுவது பலமாக அமைந்து வருகிறது. ஏனெனில் கடந்த 15 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடும் வீரராக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து வருகிறார். குறிப்பாக கடந்த 2016 சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் வெறித்தனமாக விளையாடி உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 973 ரன்களை 81.08 என்ற அபாரமான சராசரியில் 152 என்ற அதிரடியான வெளுத்து வாங்கி கேப்டனாக பெங்களூருவை ஃபைனல் வரை அழைத்துச் சென்றும் கோப்பை வெல்ல முடியாமல் போனது.

Kohli

- Advertisement -

இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக அந்த சீசனில் அவர் படைத்த சரித்திர சாதனை 6 வருடங்கள் கடந்து இன்றும் உடைக்கப்படாமல் இருந்து வருகிறது. சொல்லப்போனால் அந்த சாதனையை வரும் காலங்களிலும் உடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதற்கு முதல் போட்டியிலிருந்து அதிரடியாக விளையாடி குறைந்தது 3 – 4 சதங்கள் அடித்து ஒவ்வொரு போட்டிக்கும் குறைந்தது 80க்கும் மேற்பட்ட ரன்களை தொடர்ந்து விளாச வேண்டும்.

சாஸ்திரி நம்பிக்கை:
அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்ற நிலையில் கடந்த சீசனில் கிட்டத்தட்ட அதே போல ராஜஸ்தான் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் 876 ரன்கள் எடுக்க முடிந்ததே தவிர விராட் கோலியின் சாதனையை உடைக்க முடியவில்லை. சொல்லப்போனால் 2016 வாக்கில் அற்புதமான வயதில் தன்னுடைய கேரியரின் உச்சகட்ட ஃபார்மில் இருந்த விராட் கோலி கூட இனிமேல் அந்த சாதனையை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமாகும்.

Shubman-Gill

இந்நிலையில் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதால் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் சுப்மன் கில் அந்த சாதனையை உடைப்பார் என்று ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அதற்கு சுப்மன் கில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும். அப்போது தான் உங்களுக்கு பெரிய ரன்களை அடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த சாதனையை சுப்மன் கில் உடைப்பார் என்று கருதுகிறேன். ஏனெனில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் டாப் ஆர்டரில் விளையாடுகிறார்”

- Advertisement -

“எனவே பெரிய ரன்களை குவிக்கும் வாய்ப்புகள் அவருக்கு நிறைய கிடைக்கும். தற்போதைய ஐபிஎல் தொடரில் பிட்ச் நன்றாக உள்ளது. எனவே அவர் 2 அல்லது 3 இன்னிங்ஸில் தொடர்ந்து 80 – 100 ரன்களை குவித்தால் மட்டுமே ஒரு கட்டத்தில் 300 – 400 ரன்களை எடுக்க முடியும். இருப்பினும் கூட அந்த சாதனையை உடைப்பது என்னை பொறுத்த வரை மிகவும் கடினமாகும். ஏனெனில் 900 ரன்கள் என்பது மிகவும் பெரிய இலக்காகும். ஆனால் ஃபைனல் வரை செல்லும் ஒரு அணிக்காக விளையாடும் வீரருக்கு எக்ஸ்ட்ரா 2 போட்டிகளில் எக்ஸ்ட்ரா 2 இன்னிங்ஸ் விளையாட கிடைக்கும். அது நடந்தால் மட்டுமே இந்த சாதனையை உடைப்பது சாத்தியமாகும்” என்று கூறினார்.

Shastri

அவர் கூறுவது போல சாதனை என்றால் ஒருநாள் உடைப்பதற்காகவே படைக்கப்படுவது என்ற நல்ல டெக்னிக் மற்றும் தொடர்ந்து பெரிய ரன்களை குவிக்கும் திறமை கொண்டுள்ள சுப்மன் கில் ஒவ்வொரு போட்டியிலும் 80 ரன்களுக்கு மேல் குவித்தால் அந்த சாதனையை எளிதாக உடைக்கலாம்.

இதையும் படிங்க:IPL 2023 : அது மட்டும் நடந்துருந்தா கம்பீர் – கோலி களத்திலேயே சட்டையை பிடிச்சு சண்டை போட்ருப்பாங்க – மோர்கன் அதிரடி பேட்டி

அத்துடன் ரவி சாஸ்திரி கூறுவது போல அவருடைய அணி ஃபைனலுக்கு சென்றால் மட்டுமே எக்ஸ்ட்ரா 2 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று அதை உடைக்க முடியும். இல்லையேல் 973 ரன்கள் என்பது உண்மையாகவே அசாத்தியமான இலக்காகும்.

Advertisement