IPL 2023 : அது மட்டும் நடந்துருந்தா கம்பீர் – கோலி களத்திலேயே சட்டையை பிடிச்சு சண்டை போட்ருப்பாங்க – மோர்கன் அதிரடி பேட்டி

Eoin Morgan
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 61, டு பிளேஸிஸ் 79*, மேக்ஸ்வெல் 57 என முக்கிய வீரர்களின் அதிரடியான ரன் குவிப்பால் 20 அவர்களின் 212/2 ரன்கள் சேர்த்தது. அதைத் துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 0, க்ருனால் பாண்டியா 0, தீபக் ஹூடா 9 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்

கூடவே கேஎல் ராகுல் 18 (20) ரன்களில் தடவலாக செயல்பட்டு பெவிலியன் திரும்பிய நிலையில் கேள்விக்குறியான லக்னோவின் வெற்றியை மார்கஸ் ஸ்டோனிஸ் 65 ரன்களும் நிக்கோலஸ் பூரான் 62 (19) ரன்களும் விளாசி உறுதி செய்தனர். இறுதியில் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது ஹர்சல் படேல் – தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொதப்பியதால் கையில் இருந்த பெங்களூருவின் வெற்றி பறிபோனது. குறிப்பாக கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது ரவி பிஷ்னோயை தாமதமாக வெள்ளைக்கோட்டை தாண்டி சென்று ஹர்ஷல் படேல் மன்கட் செய்ததால் நடுவர் அவுட் கொடுக்காதது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

- Advertisement -

மோர்கன் அதிரடி:
குறிப்பாக ஒழுங்காக மன்கட் கூட செய்யத் தெரியவில்லை என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கலாய்த்தார். அதை விட விண்ணதிர முழங்கி தங்களுடைய அணிக்கு ஆதரவு கொடுத்த பெங்களூரு ரசிகர்களை தோல்வியை சந்தித்த பின் லக்னோ அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு மிரட்டியது அந்த அணி ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. Gambhir 1

இந்நிலையில் அந்தப் போட்டியில் ஹர்ஷல் படேல் மட்டும் வெற்றிகரமாக மன்கட் செய்திருந்தால் போட்டியின் முடிவில் கை கொடுத்ததற்கு பதிலாக விராட் கோலி – கௌதம் கம்பீர் ஆகியோர் தங்களது சட்டையை ஒருவருக்கொருவர் பிடித்து களத்திலேயே கைகலப்பில் ஈடுபட்டிருப்பார்கள் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் மோர்கன் அதிரடியாக பேசியுள்ளார்.

அதாவது ஒரே மாநிலத்தில் பிறந்து 2011 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட இந்தியாவுக்காக பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்தாலும் 2013 ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி – கௌதம் கம்பீர் ஆகியோர் நேருக்கு நேராக களத்தில் சண்டை போட்டு மோதிக்கொண்டதை யாராலும் மறக்க முடியாது. அப்போதிலிருந்தே விராட் கோலி சிறப்பாக செயல்பட்டாலும் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து கௌதம் கம்பீர் விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

அப்படி இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இப்போட்டியில் மன்கட் நிகழ்ந்திருந்தால் அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கலகலப்புடன் தெரிவிக்கும் மோர்கன் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் வர்ணையாளராக பேசியது பின்வருமாறு. “ஒரு தருணத்தில் மட்டுமல்ல. அது ஒரு நனவான முயற்சி என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஹர்ஷல் படேல் பந்து வீசுவதற்கு முழுமையாக தன்னை உட்படுத்திக் கொண்ட நிலையில் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரவி பிஷ்னோய் வெள்ளைக்கோட்டை விட்டு வெகு தூரம் சென்றதை பார்த்து அதிருப்தியடைந்திருப்பார்”

“அதனால் அந்த இடத்தில் முயற்சித்த ரன் அவுட்டை தவற விட்டு விட்டோமே என்றும் அவர் நினைத்திருப்பார். ஆனால் ஒருவேளை அவர் மட்டும் ரன் அவுட் (மன்கட்) செய்திருந்தால் களத்திலேயே சண்டை ஏற்பட்டிருக்கும். அது கோலி – கம்பீர் ஆகியோருக்கிடையே கையுறைகள் இல்லாமல் நடந்திருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:MI vs DC : கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா கண் பார்வையே போயிருக்கும். சூரியகுமாருக்கு ஏற்பட்ட விபரீதம் – நடந்தது என்ன?

இருப்பினும் அவ்வாறு நடைபெறாததால் விராட் – கம்பீர் ஆகிய இருவருமே போட்டியின் முடிவில் கை கொடுத்து சிரித்த முகத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement