MI vs DC : கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா கண் பார்வையே போயிருக்கும். சூரியகுமாருக்கு ஏற்பட்ட விபரீதம் – நடந்தது என்ன?

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே இரண்டு தோல்விகளை சந்தித்த மும்பை அணியானது இந்த போட்டியில் எப்படியோ ஒரு வழியாக திரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

MI vs DC

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய மும்பை அணி 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து விளையாடிய மும்பை அணியானது துவக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தாலும் இறுதி கட்டத்தில் கடைசி பந்து வரை போட்டி சென்று கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓடி எடுத்து த்ரில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் காயப்பட்டது அனைவரது மத்தியிலும் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சமீப காலமாகவே பேட்டிங் ஃபார்ம் என்று தவித்து வரும் அவர் இந்த போட்டியில் பீல்டிங்கில் சற்று சுமாராகவே செயல்பட்டார். இந்நிலையில் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த போது அவருக்கு ஏற்பட்ட காயமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு வருத்தத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Suryakumar Yadav 1

அதன்படி அக்சர் பட்டேல் அடித்த பந்தினை கேட்ச் செய்ய முயன்ற சூர்யகுமார் கைக்கு எளிதாக வந்த கேட்சை சற்று சாதாரணமாக பிடிக்க நினைத்து பந்தை நேராக தனது இடது கண்ணை நோக்கி தவற விட்டார். அப்படி அவர் பந்தினை தவறவிட்டதும் பந்து சரியாக இடது கண்ணின் மேற்புறத்தில் புருவத்தில் அடித்தது.

- Advertisement -

ஒருவேளை பந்து சற்று கீழே இறங்கி கண் மீது பட்டு இருந்தால் அவருக்கு பார்வைக் கோளாறு கூட ஏற்பட்டிருக்கலாம். இப்படி அவர் பந்தை தவறவிட்டு காயமடைந்து ரசிகர்கர்களையும் பதட்டமடைய வைத்தது.

இதையும் படிங்க : IPL 2023 : 808 நாட்கள் 2 வருடத்துக்கு பின் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா – கடைசி பந்து வரை போராடிய மும்பை சாதனை வெற்றி

அவரது இந்த காயம் கண் இமைக்கு மேல் நெத்தி பகுதியில் ஏற்பட்டதால் அவர் பெரிய காயத்திலிருந்து தப்பித்தார். அவர் தவறவிட்ட அந்த பந்து நெத்தியில் பட்டு சிக்ஸருக்கும் சென்றது. அதோடு வலியில் துடித்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டு பீல்டிங்கில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement