ஹாசிம் அம்லாவின் சாதனையை தகர்த்த சுப்மன் கில்.. ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

Shubaman Gill
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்களில் போராடி 273 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் நங்கூரமாக விளையாடி சதமடித்து 130 ரன்களும் ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். ஆனாலும் நியூசிலாந்தை 300 ரன்கள் தொட விடாமல் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 274 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோகித் சர்மா 46, கில் 26 ரன்கள் அடித்து அவுட்டானார்கள்.

- Advertisement -

கில்லின் உலக சாதனை:
இருப்பினும் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் 32, ராகுல் 27, சூரியகுமார் யாதவ் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தபோதிலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி 95 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அவருடன் ஜடேஜா 39* ரன்கள் எடுத்ததால் 48 ஓவரிலேயே வென்ற இந்தியா 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் முதல் முறையாக நியூஸிலாந்தை தோற்கடித்தது.

அதனால் லாக்கி பெர்குசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தும் நியூசிலாந்து இத்தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக இந்த உலக கோப்பையில் ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாததால் விளையாடாத சுப்மன் கில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் எடுத்த 26 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 38 இன்னிங்ஸில் சுப்மன் கில் 2012 ரன்களை 62.88 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஹாஷிம் அமலா சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. சுப்மன் கில் : 38*
2. ஹாசிம் அம்லா : 40
3. ஜஹீர் அப்பாஸ்/கேவின் பீட்டர்சன்/வேன் டெர் டுஷன்/பாபர் அசாம் : தலா 45

இதையும் படிங்க: கிடைச்ச வாய்ப்பை நாங்களே விட்டுட்டோம். இந்திய அணி அங்க தான் எங்களை தோக்கடிச்சாங்க – லேதம் வருத்தம்

அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். அந்தப் பாராட்டுக்கு தகுந்தார் போல் தம்முடைய மிகப்பெரிய கேரியருக்கு அவர் இந்த சாதனையுடன் வலுவான அடித்தளம் அமைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

Advertisement