இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு கைகொடுத்த கில்.. சச்சின், கோலிக்கு பின் அபார சாதனை

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இப்போட்டியில் வீழ்த்தும் முனைப்புடன் விளையாடும் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 396 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீகன் அகமது, ஆண்டர்சன், சோயப் பஷீர் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்தில் நல்ல துவக்கத்தை பெற்றும் கடைசியில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

விமர்சனத்துக்கு பதிலடி:
அதன் பின் 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 13, ஜெய்ஸ்வால் 17 என துவக்க வீரர்களை ஜேம்ஸ் ஆண்டர்சன் சொற்ப ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் விமர்சனங்களை சந்தித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர்.

இருப்பினும் அதில் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்கள் எடுத்த போது பென் ஸ்டோக்ஸ் பிடித்த அபாரமான கேட்ச்சால் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த அறிமுக வீரர் ரஜத் படிடார் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரை சதமடித்து இந்தியா 300 ரன்களை முன்னிலையை தாண்டுவதற்கு உதவினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த அக்சர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 3வது சதமடித்து அசத்தினார். குறிப்பாக கடந்த 18 டெஸ்ட் இன்னிங்ஸில் அரை சதம் கூட அடிக்காததால் அவரை அணியிலிருந்து நீக்குமாறு ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க: இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு கைகொடுத்த கில்.. சச்சின், கோலிக்கு பின் அபார சாதனை

இருப்பினும் அதற்கு தக்க பதிலடி கொடுத்த அவருடைய சிறப்பான ஆட்டத்தால் சற்றுமுன் வரை இந்தியா 211/4 ரன்கள் எடுத்து இப்போட்டியில் 354 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது. மேலும் இந்த சதத்தையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் விராட் கோலிக்கு பின் 25 வயதுக்குள் 10 சதங்கள் அடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 30
2. விராட் கோலி : 21
3. சுப்மன் கில் : 10*
4. விரேந்தர் சேவாக்/ரவி சாஸ்திரி/யுவராஜ் சிங் : தலா 9

Advertisement