யோ யோ டெஸ்டில் விராட் கோலியை முந்தி முதலிடம் பிடித்த இந்திய வீரர் யார் தெரியுமா? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

எதிர்வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்திய அணியின் வீரர்களை ஒருங்கிணைத்து ஆலூரில் ஒரு பயிற்சி முகாமினை நடத்தி வருகிறது. மேலும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் யோயோ டெஸ்ட் நடத்தப்பட்டு முடிந்துள்ளது. அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்வில் விராட் கோலி 17.2 புள்ளிகள் பெற்றதாக அவரே சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார்.

Asia-Cup

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவர் அதிக யோ யோ மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த யோ யோ டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கே.எல் ராகுல் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் யோ யோ டெஸ்டில் பங்கேற்றார்கள் என்றும் கூறப்படுகிறது. 16.5 புள்ளிகள் வரை அடிப்படை தகுதி புள்ளிகளாக வைத்து நடத்தப்படும் இந்த யோ டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியின் வீரர்களால் அணியில் இடம் பிடிக்க முடியும்.

Gill

அந்த வகையில் இந்த தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் 16.5 இலிருந்து 18 வரை எடுத்து தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. அதோடு இந்திய வீரர்களில் அதிகபட்சமாக விராட் கோலியையும் தாண்டி சுப்மன் கில் 18.7 புள்ளிகள் பெற்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீப காலமாகவே தொடர்ச்சியாக ஓய்வின்றி அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வரும் சுப்மன் கில் இப்படி இந்த யோ யோ தேர்விலும் தனது பிட்னஸை அதிக அளவில் வெளிக்காட்டியுள்ள தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி பத்தி அவங்க சொன்னது சரி தான், அதை செஞ்சா இந்தியா 2023 உ.கோ ஜெயிக்க வாய்ப்பிருக்கு – ஏபிடி கருத்து

கடந்த பல ஆண்டுகளாகவே ஃபிட்னஸில் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்துவரும் விராட் கோலியையே தற்போது சுப்மன் கில் பின்னுக்கு தள்ளியுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை ஆலூரில் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி அங்கிருந்து இலங்கை நாட்டிற்கு புறப்பட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement