விராட் கோலி பத்தி அவங்க சொன்னது சரி தான், அதை செஞ்சா இந்தியா 2023 உ.கோ ஜெயிக்க வாய்ப்பிருக்கு – ஏபிடி கருத்து

- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது. முன்னதாக 2019 உலகக் கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியாக இருந்த ராயுடுவை கழற்றி விட்ட தேர்வு குழுவினர் வாய்ப்பு கொடுத்த விஜய் சங்கர் சுமாராக செயல்பட்டு காயமடைந்து வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்தார்.

KL rahul Shreyas Iyer

- Advertisement -

அதை தொடர்ந்து தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் போன்ற நிறைய வீரர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுத்தும் அதில் யாருமே காயம் மற்றும் சுமாரான ஃபார்ம் காரணமாக நிலைத்து விளையாடவில்லை. இருப்பினும் ஒரு வழியாக கடந்த 2022 ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த இடத்தில் விளையாடி அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தின் பிரச்சனையை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

ஏபிடி ஆதரவு:
மேலும் இதுவரை முழுமையாக குணமடையாமல் இருக்கும் அவருக்கு சரியான மாற்று பேக்-அப் வீரரும் இல்லாத காரணத்தால் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே அந்த பிரச்சனையையும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத பிரச்சனையும் சரிசெய்ய 20 வயதில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி அசத்திய திலக் வர்மாவை தேர்வு செய்யலாம் என்ற கருத்துக்கள் காணப்பட்டது. அதற்கு மத்தியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4வது இடத்தில் களமிறக்கலாம் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசனை தெரிவித்தார்.

Virat Kohli

ஆனால் 3வது இடத்தில் விளையாடி நன்கு செட்டிலாகியுள்ள அவரை மாற்றினால் 2007 உலகக் கோப்பையில் சச்சினுக்கு நேர்ந்த நிலைமை தான் ஏற்படும் என்று டாம் மூடி போன்ற முன்னாள் வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில் விராட் கோலி 4வது இடத்தில் விளையாடினால் அது 2023 உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு சரியான முடிவாகவே இருக்கும் என்று தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் இன்னும் இந்தியாவுக்காக நம்பர் 4வது இடத்தில் பேட்டிங் செய்யப் போவது யார் என்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்”

- Advertisement -

“அந்த சூழ்நிலையில் 4வது இடத்தில் விராட் கோலி விளையாடுவார் என்ற சில வதந்திகளை நான் கேள்விப்பட்டேன். அந்த கருத்துக்கு நான் மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறேன். விராட் கோலி நம்பர் 4 இடத்தில் விளையாடுவதற்கு கச்சிதமானவர் என்று நினைக்கிறேன். அவர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி ஒரு இன்னிங்ஸை இணைக்க முடியும். ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா என்பது எனக்கு தெரியவில்லை”

ABD

இதையும் படிங்க:என்னது யோ-யோ டெஸ்டில் விராட் கோலியை முந்தினாரா ரோஹித் சர்மா? – உண்மை விவரம் இதோ

“ஏனெனில் அவர் எப்போதுமே நம்பர் 3 இடத்தில் நிலையாக விளையாடுவதை விரும்புவார் என்பதை அனைவரும் அறிவோம். அங்கு தான் அவர் அதிக ரன்களையும் சேர்த்துள்ளார். இருப்பினும் அணிக்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோணத்தில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய கையை உயர்த்தி அதற்கு செல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement