என்னது யோ-யோ டெஸ்டில் விராட் கோலியை முந்தினாரா ரோஹித் சர்மா? – உண்மை விவரம் இதோ

Kohli-and-Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட தயாராகி வருகிறது. அதோடு இந்திய வீரர்களுக்கு அவ்வப்போது நடத்தப்படும் யோ யோ டெஸ்டிலும் பங்கேற்று தங்களது உடற்தகுதி குறித்த தேர்வினையும் முடித்துள்ளது. அதன்படி கடந்த வியாழக்கிழமை இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி தனது யோ யோ டெஸ்ட் ஸ்கோரின் மதிப்பு 17.2 என இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிர்ந்திருந்தார்.

Virat-Kohli

- Advertisement -

அந்த தகவலே கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்த செய்தியாக இருந்தது. உலகின் ஃபிட்டஸ்ட் கிரிக்கெட் வீரராக பார்க்கப்படும் விராட் கோலி எடுத்துள்ள இந்த 17.2 மதிப்பெண் என்பது நல்ல புள்ளிகள் தான் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எட்டிய புள்ளிகளை விட இது குறைவு என்று கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விராட் கோலி யோ யோ டெஸ்டில் 19 புள்ளிகள் வரை பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சமூக வலைதளம் மூலம் வெளியான ஒரு விவரப்படி விராட் கோலியை விட ரோகித் சர்மா யோ யோ டெஸ்டில் அதிக புள்ளிகள் பெற்றுள்ளார் என்றும் ரோகித் சர்மா இந்த தேர்வில் 18.6 புள்ளிகளை தொட்டதாகும் தகவல் வெளியாகியது.

News

இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் இந்திய அணியில் பல வீரர்கள் பிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து பிட்டாக இருக்கும் வேலையில் அவர்களை விட சற்று உடல் பருமனான ரோகித் எப்படி இவ்வளவு புள்ளிகளை பெற முடியும் என்பதே அனைவரது கேள்வியாகவும் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மாவின் ரசிகர்களில் யாரோ ஒருவர் தான் இதே போன்ற தகவலை உருவாக்கி பகிர்ந்து இருக்க வேண்டும் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2023 உலககோப்பை : 15 பேர் கொண்ட தனது இந்திய அணியை அறிவித்த சவுரவ் கங்குலி – லிஸ்ட் இதோ

விராட் கோலி யோ யோ டெஸ்டின் புள்ளிகளை பகிர்ந்த போதே பிசிசிஐ நிர்வாகம் அவரை கண்டித்து இதுபோன்ற சீக்ரெட்டான தகவல்களை வெளியில் பகிரக்கூடாது என்று தெரிவித்திருந்த வேளையில் ரோகித் சர்மா அடுத்த நாளே இதே போன்ற தகவலை வெளியிட வாய்ப்பு இல்லை எனவே ரசிகர்களில் யாரோ தான் இது போன்ற பொய்யான தகவலை பகிர்ந்து உள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணியின் வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் ஆலூரில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement