வருங்காலத்தில் அசத்தப் போகும் லெஜெண்ட் பிளேயர்ஸ் அவங்க தான்.. 2 வீரர்களை பாராட்டிய நாசர் ஹுசைன்

Nasser Hussain 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடத்தில் உலகம் முழுவதிலும் நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடிய தங்களுடைய நாட்டின் வெற்றிகளில் பங்காற்றினர். அதில் உச்சகட்டமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிராவிஸ் ஹெட் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய ஃபைனல்களில் சதமடித்து இந்தியாவை தோற்கடித்து வெற்றி பெற வைத்தது மறக்க முடியாததாக அமைந்தது.

அதே போல அந்த 2 கோப்பைகளையும் கேப்டனாக பட் கமின்ஸ் வென்று சாதனை படைத்த நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 765 ரன்கள் குவித்து ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரராகவும் சாதனை படைத்த அவர் தம்மால் முடிந்தளவுக்கு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

வருங்கால லெஜெண்ட்ஸ்:
அதே போல சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களும் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக தங்களை காண்பித்தனர். இந்நிலையில் இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் 2024 உட்பட வருங்கால லெஜெண்ட் வீரர்களாக உருவெடுப்பார்கள் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஐசிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இளம் வீரர்களில் நான் சுப்மன் கில்லை தேர்வு செய்கிறேன். 2023ஆம் ஆண்டில் அவர் முதல் 9 – 10 மாதங்களில் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கிய அவர் நிறைவற்றை கற்றுள்ளார். கடைசி சில மாதங்களில் அவர் உடல்நிலை சரியில்லாததால் தடுமாறினார். இருப்பினும் அவர் வருங்காலத்தில் இந்தியாவுக்காக அசத்தப்போகும் சூப்பரான திறமை கொண்டவர். அவர் 2024 வருடத்திலும் அசத்துவார் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“அதே போல உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடியதை நான் பார்த்துள்ளேன். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் மிடில் ஆர்டரில் வந்து அதிரடியாக விளையாடினார். தற்போது டாப் ஆர்டரில் கொடுத்த வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த முன்னேற்றத்தை அவர் தொடர்வார்” என்று நம்புகிறேன் என கூறினார்.

இதையும் படிங்க: 2வது மேட்ச்லயாவது ஜெயிக்க அந்த 2 மாற்றங்களை செய்ங்க.. இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் ஆலோசனை

முன்னதாக 47 போட்டிகளில் 2126 ரன்களை குவித்த சுப்மன் கில் 2023 காலண்டர் வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். அதே போல 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 578 ரன்கள் குவித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி அறிமுக உலகக் கோப்பையிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement