பேசாம ரிட்டையர் ஆகிடுங்க.. வம்பிழுத்த பேர்ஸ்டோ.. ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை எடுத்த கில்

Johnny Bairstow vs Gill
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் கடைசியில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனை படைத்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

முன்னதாக தரம்சாலா நகரில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்து 110 ரன்கள் குவித்து இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார். அந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக இறங்கி சென்று அவர் அடித்த சிக்சர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஸ்லெட்ஜிங் விக்கெட்:
ஆனால் தம்முடைய பந்தில் சிக்ஸர் அடித்ததால் கடுப்பான ஆண்டர்சன் அவரை முறைத்துப் பார்த்தார். அதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரிடையே ஸ்லெட்ஜிங் ஏற்பட்டது. அது பற்றி 2வது நாள் முடிவில் கேட்ட போது நாங்கள் பேசிக் கொண்டது எங்களுக்குள்ளேயே இருப்பது மட்டுமே நல்லது என்று சுப்மன் கில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் 229 ரன்கள் பின்தங்கிய நிலமையில் களமிறங்கிய இங்கிலாந்து அஸ்வினுக்கு எதிராக டாப் 3 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து 36/3 என்று தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது தன்னுடைய 100வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக நேராக முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த சுப்மன் கில்லுடன் நிகழ்த்திய உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது பின்வருமாறு.

- Advertisement -

பேர்ஸ்டோ: ஆண்டர்சனிடம் ஓய்வு பெறுவது பற்றி நீ என்ன சொன்னாய்?
கில்: நான் அவரிடம் ஓய்வு பெறுமாறு சொன்னேன்
பேர்ஸ்டோ: அப்படி நீ சொன்ன அடுத்த பந்திலேயே அவர் உன்னை அவுட் செய்தார் தெரியும் தானே?
கில்: அவுட்டானால் என்ன? அவர் என்னை சதமடித்த பின்பு தான் அவுட்டாக்கினார்.
பேர்ஸ்டோ: 100%
கில்: இந்த தொடரில் நீங்கள் எத்தனை சதங்கள் அடித்துள்ளீர்கள்?
பேர்ஸ்டோ: நீ எத்தனை சதம் அடித்திருக்கிறாய்? முற்றுப்புள்ளி.

இதையும் படிங்க: அந்த பைத்தியக்காரத்தனத்தை கூடவா ஒழுங்கா செய்ய தெரியாது.. இங்கிலாந்தின் பஸ்பாலுக்கு குட் பை கொடுத்த சேவாக்

என்ற வகையில் அந்த உரையாடல் முடிந்தது. அப்படி எத்தனை சதங்கள் அடித்தாய்? என்று தன்னிடம் கேட்டதால் கில்லுக்கு பதிலடி கொடுப்பதற்காக அடுத்த சில ஓவர்களுக்குள் அஸ்வினுக்கு எதிராக 3 சிக்சர்களை பறக்க விட்ட பேர்ஸ்டோ 38 (28) ரன்கள் விளாசினார். ஆனால் அதன் காரணமாக கவனத்தை இழந்த பேர்ஸ்டோ அடுத்த ஓவரிலேயே குல்தீப் யாதவுக்கு எதிராக எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகி சென்றார். அப்போது “இன்று கொஞ்சம் ரன்கள் அடித்து விட்டார். அதனால் அதிகமாக துள்ளுகிறார்” என்று பேர்ஸ்டோவிடம் சொன்ன சர்பராஸ் கான் ஸ்லெட்ஜிங்கை முடித்து வைத்து வழி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement