அந்த பைத்தியக்காரத்தனத்தை கூடவா ஒழுங்கா செய்ய தெரியாது.. இங்கிலாந்தின் பஸ்பாலுக்கு குட் பை கொடுத்த சேவாக்

Virender Sehwag 77
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்றுள்ளது. குறிப்பாக விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டது.

அத்துடன் வரலாற்றிலேயே 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் முதல் போட்டியில் தோற்ற பின்பும் கடைசியில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற புதிய சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து இத்தொடரின் முதல் போட்டியிலேயே வென்று ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
ஆனால் அதற்காக அதற்கடுத்த 4 போட்டிகளிலும் அதே அணுகு முறையை கையாண்ட அந்த அணி அழுத்தமான நேரத்தில் கடினமான சூழ்நிலையை மதித்து விளையாடாமல் 4 தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த பரிதாபத்துடன் இங்கிலாந்து நாடு கிளம்பியது.

மேலும் இந்த 4 தொடர்ச்சியான தோல்விகளால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ள இங்கிலாந்து அடுத்த வருடம் லண்டனில் நடைபெறும் ஃபைனலுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பைத்தியக்காரத்தனமாக விளையாடுவதற்கு பெயர் தான் பஸ்பால் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் அதையும் இங்கிலாந்து சரியாக சரியாக விளையாடவில்லை என்று தெரிவிக்கும் இது பற்றி தொடரின் முடிவில் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “பஸ்பால், பட்டி குல். பைத்தியக்காரத்தனத்திற்கும் ஒரு முறை என்று இருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து அணியிடம் அதற்கு பொருந்தக்கூடிய ஆட்டம் இல்லை. குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த பின்பும் அவர்கள் மீண்டு வருவதற்கான துப்பு தெரியாமல் இருந்தனர்”

இதையும் படிங்க: அதை செய்றதுக்கு மனசு வேணும்.. இந்திய அணியின் கேரக்டருக்கு அஸ்வின் தான் எடுத்துக்காட்டு.. டிராவிட் பாராட்டு

“கேப்டன் மோசமாக விளையாடியது தடுமாறிய இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவை கூட்டியது. இந்த தொடர் முழுவதுமே அவர்கள் ஒரு மாயையில் வாழ்வது போல் தோன்றியது. இந்த அணுகு முறையைப் பின்பற்றி வெற்றி பெறுவதற்கு பைத்தியக்காரத்தனமாக ஒரு முறை என்று இருக்க வேண்டும். ஆனால் அதிலும் இங்கிலாந்து தடுமாறியது” என்று கூறினார். இது போக நாசர் ஹுசைன் போன்ற நிறைய முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் தங்களுடைய அணியின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement