அதை செய்றதுக்கு மனசு வேணும்.. இந்திய அணியின் கேரக்டருக்கு அஸ்வின் தான் எடுத்துக்காட்டு.. டிராவிட் பாராட்டு

Rahul Dravid Ashwin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. குறிப்பாக இத்தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது.

ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் வரிசையாக இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா 112 வருடங்கள் கழித்து முதல் போட்டியில் தோற்றும் இறுதியில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இங்கிலாந்தை தோற்கடித்துள்ள இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் காண்பித்தது.

- Advertisement -

டிராவிட் பாராட்டு:
இந்நிலையில் இந்த தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் முக்கிய வீரர்கள் இல்லாவிட்டாலும் கடைசியில் போராடி வெற்றி கண்டது பெருமையை கொடுப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். குறிப்பாக 3வது போட்டியில் பாதியிலேயே வெளியேறிய அஸ்வின் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலையைத் தாண்டி இந்தியாவின் வெற்றிக்காக மீண்டும் போராட வந்ததாக டிராவிட் பாராட்டியுள்ளார்.

அந்த வகையில் கடினமான சூழ்நிலையிலும் போராடி வெற்றி பெறுவோம் என்ற இந்திய அணியின் குணத்திற்கு அஸ்வின் எடுத்துக்காட்டாக இருப்பதாக தெரிவிக்கும் டிராவிட் இது பற்றி தரம்சாலா போட்டிக்கு பின் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் சில மகத்தான செயல்பாடுகளை நாங்கள் வெளிப்படுத்தினோம். அதில் ஒரு முக்கியமான தருணத்தை மட்டும் தேர்வு செய்வது கடினமாகும்”

- Advertisement -

“இருப்பினும் கடினமான சூழ்நிலைகளுக்கு சென்றும் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பிய தருணத்தை நான் சொல்வேன். இப்படி நாங்கள் வெற்றி பெறுவதற்கு தேவையான செயல்பாடுகளை வெளிப்படுத்துவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மோசமான நிலையை கடந்து வந்த பின்பும் அஸ்வின் திரும்பி வந்து அணிக்கு பங்களிக்க விரும்பியதே உண்மையில் இந்திய அணி எதைப் பற்றியது, இந்த அணியின் குணம் என்ன என்பதை குறிக்கிறது”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? பத்திரிக்கை நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த – கேப்டன் ரோஹித் சர்மா

“அது தான் இந்த தொடரில் உயர்ந்து நின்ற தருணமாகும். ஒரு பயிற்சியாளராக அதை பார்ப்பது உங்களுடைய இதயத்தை மிகவும் மகிழ்விக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக அணிக்காக மீண்டும் விளையாட வந்த அஸ்வின் இந்த தொடரில் 500 விக்கெட்டுகள் 2வது இந்திய வீரர், 100 போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரர் போன்ற சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement