டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? பத்திரிக்கை நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த – கேப்டன் ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்காக அனுபவ வீரர்கள் விளையாடாமல் இருந்த வேளையில் ஐந்து புதுமுக வீரர்கள் அறிமுகமாகியிருந்தனர்.

இப்படி முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய ரோஹித் சர்மா இந்த தொடரை கைப்பற்றியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் 36 வயதான ரோஹித் சர்மா இந்த போட்டி முடிந்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தனது ஓய்வு குறித்தும் சில விடயங்களை மனம் திறந்து பேசி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் :

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த தரம்சாலா மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை நமது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினார் என்று பாராட்டினார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பேசிய அவர் ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் :

- Advertisement -

எனது ஆட்டம் எப்போது அணிக்கு போதுமானது அல்ல என்று எனக்கு தோன்றுகிறதோ அன்றைய நாளில் நான் உடனடியாக ஓய்வை அறிவித்து விடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எனது ஆட்டத்தை நான் மெருகேற்றி இருக்கிறேன் என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை தற்போது நான் ஆடி வருவதாக உணர்கிறேன். எனவே தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய பின்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் நிலை – என்ன தெரியுமா?

அண்மைமையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி தவறவிட்டதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement