இங்கிலாந்து தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய பின்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் நிலை – என்ன தெரியுமா?

IND-vs-ENG
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த தொடரின் முதல் போட்டியை தோல்வியுடன் ஆரம்பித்த இந்திய அணியானது அடுத்ததாக அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக நான்கு தொடர் வெற்றிகளை பெற்று இங்கிலாந்து அணியை மண்ணை கவ்வ வைத்தது.

இப்படி ஒரு வரலாற்று சிறப்பு வெற்றியினை ருசித்த இந்திய அணிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இவ்வேளையில் தற்போது 2023 – 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரின் வெற்றி இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

கடந்த இருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரை சென்று இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. இவ்வேளையில் இம்முறையாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டக்கு சென்று வெற்றி வாகை சூட வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

அந்தவகையில் உத்வேகத்துடன் விளையாடி வரும் இந்திய அணிக்கு இந்த தொடரின் வெற்றி மிகப் பிரகாசமான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சற்று பின் தங்கியிருந்த இந்திய அணியானது இந்த தொடரில் பெற்ற வெற்றிக்கு பின்னர் புள்ளி பட்டியலில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலிருந்த நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தற்போது இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியானது இந்த புள்ளி பட்டியலில் 68.51 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து அணி 60 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க : 1 முதல் 100 வரை.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே செய்யாத தனித்துவ உலக சாதனை படைத்த அஸ்வின்

இந்த இரு அணிகளை தவிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே 3 மற்றும் 4 ஆவது இடங்களில் இருக்கின்றன. இன்னும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதியாக பல சவாலான தொடர்கள் இருக்கும் வேளையில் அந்த தொடர்களிலும் இந்திய அணி ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலே இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்கிற அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement