1 முதல் 100 வரை.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே செய்யாத தனித்துவ உலக சாதனை படைத்த அஸ்வின்

Ashwin 5 Wickets
- Advertisement -

தரம்சாலாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் அடுத்தடுத்து வென்ற இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

இதன் வாயிலாக 112 வருடங்கள் கழித்து 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் முதல் போட்டியில் தோற்றும் இறுதியில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை வென்ற அணி என்ற சாதனை இந்தியா படைத்தது. அதன் காரணமாக 2012க்குப்பின் சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் சாதனையையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

தனித்துவமான அஸ்வின்:
முன்னதாக தரம்சாலாவில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைத்தார். அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்து மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் குருப்புப் சீட்டாக செயல்பட்டார்.

அதை விட கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அத்துடன் 2வது இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகள் எடுத்த அவர் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து அறிமுகப் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படியே காலங்கள் உருண்டோடிய நிலையில் தற்போது தன்னுடைய 100வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக 147 வருட வரலாறு கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் “தன்னுடைய அறிமுக போட்டியிலும் 100வது போட்டியிலும் 5 விக்கெட் ஹால் எடுத்த முதல் வீரர்” என்ற தனித்துவமான உலக சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன் முத்தையா முரளிதரன், வார்னே போன்ற உலகின் வேறு எந்த பவுலர்களும் தங்களுடைய அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை.

இதையும் படிங்க: 20 ரன்ஸ் 5 விக்கெட்ஸ்.. ஹாட்ரிக் எடுத்து வங்கதேசத்தை ஓடவிட்ட மும்பை இந்தியஸ் இலங்கை வீரர்.. அதிரடி சாதனை

இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது போட்டியில் 2 இன்னிங்ஸிலும் குறைந்தது 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அஸ்வின் படைத்துள்ளார். மொத்தத்தில் தமிழகத்தில் பிறந்து இந்தியாவுக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்த அஸ்வின் அந்த 100வது போட்டியிலும் மகத்தான சாதனை படைத்துள்ளது ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement