20 ரன்ஸ் 5 விக்கெட்ஸ்.. ஹாட்ரிக் எடுத்து வங்கதேசத்தை ஓடவிட்ட மும்பை இந்தியஸ் இலங்கை வீரர்.. அதிரடி சாதனை

Nuwan Thusara
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. அதனால் சமனில் இருந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி மார்ச் 9ஆம் தேதி சைலட் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 174/7 ரன்கள் எடுத்தது. இலங்கைக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் குசால் மெண்டிஸ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் அரை சதமடித்து 86 (55) ரன்கள் குவித்து அசத்தினார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தஸ்கின் அகமது, ரிஷாத் சர்கார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

ஹாட்ரிக் வீரர்:
அதைத் தொடர்ந்து 175 ரன்களை துரத்திய இலங்கைக்கு லிட்டன் தாஸ் ஆரம்பத்திலேயே 7 ரன்களில் டீ சில்வா பந்தில் அவுட்டானார். அந்த நிலையில் 3வது ஓவரை வீசிய நுவான் துஷாரா 2வது பந்தில் கேப்டன் சாந்தோவை 1 ரன்னில் க்ளீன் போல்ட்டாக்கி அடுத்ததாக வந்த தவ்ஹீத் ஹ்ரிடாயையும் 3வது பந்தில் 0 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.

அத்தோடு நிற்காத அவர் அதற்கடுத்த பந்தில் முகமதுல்லாவை எழுபிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டாக்கி ஹார்ட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் லசித் மலிங்கா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்செயா, வணிந்து ஹசரங்கா ஆகியோருக்குப் பின் ஹாட்ரிக் விக்கெட் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 5வது வீரர் என்ற சாதனையை நுவான் துஷாரா படைத்தார்.

- Advertisement -

லசித் மலிங்காவின் பயிற்சியில் வளர்ந்த இவரை சமீப காலங்களில் நன்றாக அசத்தி வருவதை உணர்ந்து 2024 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் 4.80 கோடிகளுக்கு ஏற்கனவே வாங்கியுள்ளது. அந்த வகையில் விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடரில் அவர் தங்களுக்கு விளையாட உள்ளது மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஜாகிர் அலி 4, மெஹதி ஹசன் ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர்.

இதையும் படிங்க: என்னோட பிளான் எல்லாம் இதுமட்டும் தான்.. அதான் இந்த அடி அடிச்சேன் – தொடர்நாயகன் ஜெய்ஸ்வால் அதிரடி பேட்டி

அதனால் லோயர் மிடில் ஆர்டரில் ரிஷாத் ஹொசைன் 53 (30), தஸ்கின் அஹ்மத் 31 (21) ரன்கள் எடுத்துப் போராடியும் வங்கதேசத்தை 19.4 ஓவரில் 146 ரன்களுக்கு இலங்கை சுருட்டியது. இலங்கைக்கு அதிகபட்சமாக 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 20 ரன்கள் மட்டும் கொடுத்த துஷாரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை 2 – 1 (3) என்ற கணக்கில் வங்கதேசத்தை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்றது.

Advertisement