என்னோட பிளான் எல்லாம் இதுமட்டும் தான்.. அதான் இந்த அடி அடிச்சேன் – தொடர்நாயகன் ஜெய்ஸ்வால் அதிரடி பேட்டி

Jaiswal
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதோடு கடந்த-2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காமல் அந்த வரலாற்று சாதனையும் இந்திய அணி தக்க வைத்துக் கொண்டது.

இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் 58 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 57 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதோடு ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முடிந்த நான்கு போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து இருந்த அவர் ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்து சாதனையும் நிகழ்த்தி இருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக இந்த தொடரின் தொடர் நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மிக இளம் வயதிலேயே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவ்வேளையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்து இந்த தொடர் குறித்த தனது கருத்தினை தெரிவித்திருந்த தொடர் நாயகன் ஜெய்ஸ்வால் கூறுகையில் : இந்த தொடர் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே என்னுடைய பங்களிப்பை நான் சிறப்பாக வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் ஒரு பவுலரை அடிக்க முடியும் என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதிலிருந்து நான் பின்வாங்கியதே கிடையாது. அதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன்.

இதையும் படிங்க : 100வது டெஸ்டில் 9 விக்கெட்ஸ்.. வார்னே, முரளிதரன் சாதனை சமன்.. கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை உடைத்த அஸ்வின்

அதுமட்டும் இன்றி என்னால் எந்த அளவிற்கு பங்களிப்பினை வழங்க முடியுமோ அந்த அளவிற்கு அணிக்காக என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் இந்திய அணியை வெற்றியை நோக்கி தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாகவும் இருந்தது என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement