- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கழுத்தில் ஏற்பட்ட பாதிப்பு.. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கேப்டன் கில் – என்ன நடந்தது?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான சுப்மன் கில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியிலும் கேப்டனாக பங்கேற்று இருந்தார். இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று முடிவடைந்த வேளையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்மன் கில் :

நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த வேளையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதும் இரண்டாவது விக்கெட்டாக வாஷிங்டன் சுந்தர் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 75 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்த வேளையில் நான்காவது வீரராக சுப்மன் கில் களத்திற்கு வந்திருந்தார்.

- Advertisement -

இந்த முதல் இன்னிங்சில் 3 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஹார்மர் வீசிய பந்தில் ஸ்வீப் ஷாட் அடித்தபோது கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக 3 பந்துகளை மட்டுமே பிடித்த நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். மருத்துவ உதவியாளர்களும் அவருக்கு முதலுதவி அளித்தாலும் தொடர்ந்து அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

அதனால் பாதியிலேயே மைதானத்தில் இருந்து ஓய்வறைக்கு திரும்பிய அவர் பின்னர் முதல் இன்னிங்சில் எப்படியாவது பேட்டிங் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதிவரை அவர் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாக சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட கழுத்து வலி சற்று தீவிரமானது தான் என்பது தெரியவந்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும் முன்னதாக சுப்மன் கில்லுக்கு கழுத்தில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு சற்று தீவிரமாக மாறியதை அடுத்து ஆம்புலன்ஸ் உதவியின் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : நான் ஒன்னும் கேப்டன் இல்ல.. எனக்கு இதை பத்தி தெரியாது.. வாஷிங்டன் சுந்தரின் பிரமோஷன் பற்றி – பும்ரா அளித்த பதில்

இதன் காரணமாக இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவர் முழுவதுமாக விளையாடுவாரா? எஞ்சியுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? என்பதும் கேள்வி குறியாகியுள்ளது. ஏற்கனவே இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ : சுப்ம்ன் கில்லுக்கு கழுத்தில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதனை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.

- Advertisement -