நான் ஒன்னும் கேப்டன் இல்ல.. எனக்கு இதை பத்தி தெரியாது.. வாஷிங்டன் சுந்தரின் பிரமோஷன் பற்றி – பும்ரா அளித்த பதில்

Bumrah and Washington Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த நவம்பர் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்றதும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு சாய் சுதர்சன் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்சர் பட்டேல் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர்.

இந்த பிளான் பத்தி உண்மையிலே எனக்கு எதுவும் தெரியாது : ஜஸ்ப்ரீத் பும்ரா

கடந்த சில போட்டிகளாகவே இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாவது இடத்தில் விளையாடி வந்த முழுநேர டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவரது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது பலரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியது. டாசின் போது அறிவிக்கப்பட்டபடியே வாஷிங்டன் சுந்தரும் முதல் இன்னிங்சில் மூன்றாவது வீரராக களமிறங்கி இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.

- Advertisement -

இப்படி முழுநேர பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவரது இடத்தில் சுழற்பந்து ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருவது கலவையான விமர்சனங்களை பெற்று வரும் வேளையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும் வாஷிங்டன் சுந்தருக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த ப்ரோமோஷன் குறித்த தனது வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் நான் இல்லை. எனக்கு இந்த மாற்றம் குறித்து உண்மையிலேயே எதுவும் தெரியாது. ஆனாலும் இந்த முடிவிற்கு பின்னால் நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இன்று இருக்கும் என்று நினைக்கிறேன். அது குறித்த தகவல் நிச்சயம் விரைவில் வெளியாகும். அதை நீங்கள் அவர்களிடமே கேட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

மூன்றாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவது பற்றி முன்கூட்டியே எந்த ஒரு தகவலும் எனக்கு தெரியாது. எங்களது அணியில் தற்போது அனைத்து வீரர்களுக்குமே ஒரு பணி வழங்கப்பட்டுள்ளது. வீரர்களிளின் திறமையை நம்பி நிர்வாகமும் அவர்களுக்கான வேலையை பிரித்துக் கொடுத்துள்ளது. ஆனால் வாஷிங்டன் சுந்தரின் இந்த ப்ரோமோஷன் குறித்து எவ்வித உரையாடலும் எனக்குத் தெரிந்து நடைபெறவில்லை என்று பும்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 39 ரன்கள் அடித்ததன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய – கே.எல் ராகுல்

இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கே சுருண்ட நிலையில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களை குவித்து தனது தேர்வினை நியாயப்படுத்தி இருந்தார். இந்த முதல் இன்னிங்சில் 82 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 29 ரன்கள் அடித்ததன் மூலம் டாப் ஆர்டரிலும் தன்னால் விளையாட முடியும் என்று காட்டியுள்ளார். இருந்தாலும் இந்த மாற்றம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

Advertisement