ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 39 ரன்கள் அடித்ததன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய – கே.எல் ராகுல்

KL Rahul
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில் போட்டியின் இரண்டாம் நாளான இன்றே இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி முடித்து விட்டன. அதனால் போட்டியின் மூன்றாம் நாளிலேயே முடிவு கிடைத்து விடும் என்று தெரிகிறது.

கே.எல் ராகுல் நிகழ்த்திய விசித்திரமான சாதனை :

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணியானது 30 ரன்கள் பின்தங்கியுடன் நிலையுடன் தங்களது இன்னிங்சை ஆரம்பித்து தற்போது வரை இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக 63 ரன்கள் முன்னிலையுடன் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி விளையாட இருக்கிறது. நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் எஞ்சியுள்ள மூன்று விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க அணி விரைவில் இழக்கும் பட்சத்தில் இந்திய அணி இந்த போட்டியின் மூன்றாம் நாள் அன்று எளிதில் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக இந்த போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகவும் வித்தியாசமான தனித்துவமான சாதனையை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நிகழ்த்தியுள்ளார். அது குறித்து தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுமே தங்களது முதல் இன்னிங்சை விளையாடி முடித்துவிட்ட வேளையில் அதிகபட்ச ரன்களாக கே.எல் ராகுல் அடித்த 39 ரன்களே பதிவாகியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 119 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ருடன் 39 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி அசத்தலான சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

இந்த ரன்களே இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளிலும் சேர்த்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக மாறியுள்ளது. இதன்மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி முடித்த வேளையில் குறைந்த ரன்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டாப் ஸ்கோராக கே.எல் ராகுலின் 39 ரன்கள் கொண்ட இந்த இன்னிங்ஸ் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement