IND vs SL : அதிரடி சதமடித்த சுப்மன் கில் – ஆரம்பத்திலேயே விராட் கோலியை மிஞ்சி புதிய சாதனையுடன் விமர்சனங்களுக்கு பதிலடி

Shubman-Gill
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் ஜனவரி 15ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சம்பிரதாய கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக விரைவாக ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்து நிதானத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 95 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 42 (49) ரன்களில் ஆட்டமிழந்தார்.

Shubman Gill

- Advertisement -

அந்த நிலைமையில் களமிறங்கிய விராட் கோலி அந்த தொடக்கத்தை வீணடிக்காத வகையில் அதிரடியாக ரன்களை சேர்த்து ரசிகர்களை மகிழ்வித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய சுப்மன் கில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தி சதத்தை விளாசினார். தொடர்ந்து அசத்திய அவர் 14 பவுண்டரி 2 சிக்சருடன் 116 (97) ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி கொஞ்சமும் அதிரடியை குறைக்காமல் விரைவாக ரன்களை சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 46வது சதத்தை விளாசினார்.

கோலியை மிஞ்சி:
அவருடன் அதிரடியாக விளையாட முயன்ற ஸ்ரேயாஸ் ஐயர் 3வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து 38 (32) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த கேஎல் ராகுல் 7, சூர்யகுமார் யாதவ் 4 என முக்கிய வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சென்றனர். இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய விராட் கோலி 13 பவுண்டர் 8 சிக்ஸருடன் 166* (110) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் இந்தியா 50 ஓவர்களில் 390/5 ரன்கள் விளாசியது.

Virat Kohli 46

அந்த வகையில் இப்போட்டியில் அதிக ரன்களையும் பெரிய சதத்தையும் விளாசிய விராட் கோலி நிறைய சாதனைகளை படைத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் 390 ரன்கள் குவிக்க நல்ல அடிதளமிட்ட இளம் வீரர் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 2வது சதத்தை விளாசி அசத்தினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 20 இன்னிங்களுக்குள் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் விராட் கோலி முதல் 20 இன்னிங்ஸில் 847 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் 18 இன்னிங்ஸிலேயே 894 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். அந்த பட்டியல்:
1. சுமன் கில் : 894*
2. விராட் கோலி : 847
3. நவ்ஜோட் சித்து : 822
4. ஸ்ரேயாஸ் ஐயர் : 813
5. ஷிகர் தவான் : 783

Shubman Gill

கடந்த 2019லேயே ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டதால் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய அவர் இந்த இலங்கைத் தொடரில் ஆரம்பம் முதலே வாய்ப்பு பெற்று அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க: வீடியோ : நடந்த வாக்கில் 97 மீட்டர் ஹெலிகாப்டர் சிக்ஸரை பறக்க விட்ட கிங் கோலி – ஜெயவர்தனேவை முந்தி வரலாற்று சாதனை

இருப்பினும் கடைசியாக நடைபெற்ற வங்கதேச தொடரில் இரட்டை சதமடித்த இசான் கிசான் இவருக்காக பெஞ்சில் அமர வைக்கப் பட்டதால் இவர் நிறைய விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அதற்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்து வரும் அவர் நானும் இஷான் கிசானுக்கு கொஞ்சமும் குறைந்தவன் அல்ல என்பதை நிரூபித்து 2023 உலகக்கோப்பை இந்திய அணியில் விளையாடும் வீரர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement