வீடியோ : நடந்த வாக்கில் 97 மீட்டர் ஹெலிகாப்டர் சிக்ஸரை பறக்க விட்ட கிங் கோலி – ஜெயவர்தனேவை முந்தி வரலாற்று சாதனை

Virat Kohli Six
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியா ஜனவரி 15ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கிய சம்பிரதாய கடைசிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்ட சுப்மன் கில் விரைவாக ரன்களை சேர்த்து அரை சதமடித்த நிலையில் மறுபுறம் சற்று நிதானத்தை காட்டிய கேப்டன் ரோகித் சர்மா 16 ஓவர்கள் வரை நிலைத்த நின்று 95 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து 2 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (49) ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலையில் அடுத்து களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ரன்களை சேர்த்த நிலையில் மறுபுறம் வெளுத்து வாங்கிய சுப்மன் கில் 14 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 116 (97) ரன்கள் குவித்து 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தி அவுட்டானார். அவருடன் பேட்டிங் செய்த விராட் கோலி அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து வேகமாக செயல்பட்டு அரை சதமடித்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார்.

- Advertisement -

அசால்ட்டான ஹெலிகாப்டர்:
நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி இலங்கை பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 46வது சதமடித்து ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 74வது சதத்தை விளாசி அசத்தினார். அவருடன் மறுபுறம் அதிரடியாக விளையாட முயன்ற ஸ்ரேயாஸ் ஐயர் 3வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை 300 ரன்கள் கடக்க உதவி 38 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் வந்த கேஎல் ராகுல் 7 (6) சூரியகுமார் 4 (4) என முக்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

ஆனாலும் மறுபுறம் சதமடித்தும் ஓயாமல் கடைசி நேரத்தில் மேலும் அதிரடியாக விளையாடிய விராட் கோலி இலங்கை பவுலர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்டு அபார பினிஷிங் கொடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 390/5 ரன்கள் குவித்தது. கடைசி வரை அவுட்டாகாமல் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அவர் 13 பவுண்டரி 8 சிக்ஸருடன் 166* (110) ரன்களை
விளாசி மிகச் சிறந்த பினிஷராகவும் இப்போட்டியில் ஜொலித்தார்.

- Advertisement -

குறிப்பாக இப்போட்டியில் சதத்தை அடித்ததும் வேகமாக ரன்களை குவிக்க துவங்கிய விராட் கோலி கௌசன் ரஜிதா வீசிய 44வது ஓவரின் 3வது பந்தில் நேராக அடிக்கலாம் என்று இறங்கி வந்த நிலையில் பந்து பிட்ச்சான பின் கடைசி நேரத்தில் லைன் மாறியது. ஆனால் அதற்காக எடுத்த காலை பின் வைக்காமல் அப்படியே சுழற்றி அடித்த விராட் கோலி லாங் ஆன் திசைக்கு மேல் 97 மீட்டர் அபார சிக்சரை பறக்க விட்டு கேரளத்து ரசிகர்களின் நெஞ்சங்களை குளிர்வித்தார்.

குறிப்பாக நடந்த வாக்கில் கையை சுழற்றி அவர் அடித்த அந்த சிக்ஸர் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட் போலவே இருந்தது ரசிகர்களை மேலும் துள்ளி குதிக்க வைத்தது. அப்படி அதிரடியாக விளையாடிய அடித்த 166 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 5வது வீரர் என்ற இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனே சாதனையை தகர்த்த விராட் கோலி புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 18426
2. குமார் சங்ககாரா : 14234
3. ரிக்கி பாண்டிங் : 13704
4. சனாத் ஜெயசூர்யா : 13430
5. விராட் கோலி : 12714*
6. மகிளா ஜெயவர்த்தனே : 12650

இதையும் படிங்க: IND vs SL : மீண்டும் சதமடித்த கிங் விராட் கோலி – ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சி மலைக்க வைக்கும் 2 பிரம்மாண்ட உலக சாதனை

இத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 46 சதங்களையும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 74 சதங்களையும் அடித்த வீரராகவும் சாதனை படைத்த அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.

Advertisement