கண்டிப்பா பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் அதை சாதிப்பேன்.. ஷ்ரேயாஸ் ஐயர் உறுதி – விவரம் இதோ

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கொல்கத்தா அணியால் வெளியேற்றப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

பஞ்சாப் அணிக்காக கோப்பையை ஜெயிக்கனும் :

சவுதி அரேபியாவில் கடந்த மாதம் நடைபெற்ற இந்த மெகா ஏலத்தில் சாம்பியன் கேப்டனாக கலந்து கொண்ட அவரை இரண்டாவது பெரிய தொகைக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது. லக்னோ அணிக்காக 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்டிருந்த வேளையில் பஞ்சாப் அணியால் 26 கோடியை 75 லட்சம் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஷ்ரேயாஸ் ஐயர் வாங்கப்பட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஆண்டு அவரே பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரினை கேப்டனாக மும்பை அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.

இதன் மூலம் ஒரே ஆண்டில் இரண்டு டி20 சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த முதல் இந்திய கேப்டன் என்று சாதனையையும் அவர் நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆசை தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற பிறகு ஒரு அதிசயமான உணர்வு எனக்குள் இருக்கிறது. இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு அணியாக நாங்கள் மிகப்பெரிய உழைப்பை வெளிப்படுத்தி உள்ளோம். மிகக் கடினமான இந்த தொடரில் அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். சையது முஷ்டாக் அலி தொடரை வெற்றிகரமாக முடித்து இருக்கிறோம். என்னுடைய அடுத்த இலக்கு பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்வது தான்.

இதையும் படிங்க : என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வந்ததே அந்த ஒரு மேட்ச்க்கு பின்னாடி தான் – ரிங்கு சிங் ஓபன்டாக்

பஞ்சாப் அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க காத்திருக்கிறேன். ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து வேலை செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அடுத்த சில ஆண்டுகளுக்கு பஞ்சாப் அணியுடன் இணைந்து இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement