என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வந்ததே அந்த ஒரு மேட்ச்க்கு பின்னாடி தான் – ரிங்கு சிங் ஓபன்டாக்

Rinku-Singh
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பினிஷராக விளையாடி வரும் ரிங்கு சிங் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆனாலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள கொல்கத்தா அணியானது அவரை மிகப்பெரிய தொகைக்கு ஏற்கனவே தக்க வைத்தது. அதன் காரணமாக அடுத்த மூன்று ஆண்டுக்கு அவர் கொல்கத்தா அணியில் விளையாடப்போவது உறுதி.

என் வாழ்க்கையே மாறியது அந்த போட்டியில் தான் :

இந்நிலையில் கொல்கத்தா அணியில் விளையாடிய பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசியிருந்த ரிங்கு சிங் பல்வேறு சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது :

- Advertisement -

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி குறித்து நான் அதிகமாக சிந்திக்கவில்லை. இந்த சீசனிலும் கொல்கத்தா அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதே வேளையில் உத்தரபிரதேச அணிக்காக நான் கேப்டன்சி செய்ய இருப்பது மகிழ்ச்சி. ஏற்கனவே உத்தரபிரதேச அணிக்காக டி20 லீக் போட்டியில் பந்து வீச முயற்சித்தேன்.

நவீன கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுமே தேவைப்படுகிறது. எனவே நிச்சயம் அதையும் நான் செய்ய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான உத்தர பிரதேச அணியின் கேப்டனாக எனக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. அதற்கு நான் தயாராக வேண்டும்.

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட் கரியர் மாறியதற்கு முக்கிய காரணமே நான் ஐபிஎல் தொடரின் போது 5 சிக்ஸர்கள் அடித்த பிறகு தான். அந்த போட்டிக்கு பிறகு நான் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அந்த போட்டி மிகப்பெரிய மாற்றத்தை தந்தது. அதன் பிறகு அனைத்துமே நல்லதாக நடந்து வருகிறது. இனியும் கடவுள் எனக்காக ஏதாவது செய்வார் என்று நினைக்கிறேன். அதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கிண்டல் பண்ணாதீங்க.. இந்தியாவின் ஆட்டமே இந்த கொண்டாட்டத்தில் தான் இருக்கு.. ஆஸிக்கு ரவி சாஸ்திரி பதிலடி

அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் ரிங்கு சிங் தற்போது இந்தியாவில் அடுத்ததாக துவங்கி நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான உத்திரபிரதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement