கிண்டல் பண்ணாதீங்க.. இந்தியாவின் ஆட்டமே இந்த கொண்டாட்டத்தில் தான் இருக்கு.. ஆஸிக்கு ரவி சாஸ்திரி பதிலடி

Ravi Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. 3வது போட்டியிலும் சுமாராக விளையாடிய இந்தியா கிட்டத்தட்ட தோல்வியின் பிடியில் சிக்கியது. இருப்பினும் மழையின் உதவியுடன் ஃபாலோ ஆனை தவிர்த்த இந்தியா போராடி டிரா செய்தது.

அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் இப்போதும் சமனில் இருக்கும் இந்தத் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் துவங்க உள்ளது. முன்னதாக காபாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பின்னர் சுமாராக விளையாடிய இந்தியாவுக்கு ஃபாலோ ஆனை தவிர்க்க கடைசி விக்கெட்டுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டதால் ரசிகர்கள் கவலையில் ஆழந்தனர்.

- Advertisement -

இந்தியாவின் கொண்டாட்டம்:

அப்போது ஜஸ்ப்ரித் பும்ரா – ஆகாஷ் தீப் 44 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றினார்கள். அதன் காரணமாக பெவிலியினில் இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் ஆகியோர் அதை கொண்டாடினார்கள். மறுபுறம் வெற்றி பெற்றது போல இந்திய அணியினர் கொண்டாடியதை பார்த்து எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தார்கள்.

மேலும் இந்தியா அப்படி கொண்டாடியது தமக்கு ஆச்சரியம் என்று ஆஸ்திரேலியாவின் நேதன் கூறினார். இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களை எதிர்கொள்ள விரும்பாததாலேயே அப்படி கொண்டாடியிருக்கலாம் என்றும் லயன் மறைமுகமாக கிண்டலடித்தார். இந்நிலையில் காபாவில் ஃபாலோ ஆனை தவிர்த்த தருணம் 2021இல் 36க்கு ஆல் அவுட்டாகி மீண்டும் கம்பேக் கொடுத்து வென்றதைப் போன்ற உத்வேகத்தை இந்தியாவுக்கு கொடுத்துள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆட்டம் ஆரம்பம்:

இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் அதை கொண்டாட வேண்டும். ஏனெனில் 35 – 36 ரன்களை கடைசி ஜோடி எடுப்பதற்கு நிறைய போராட்ட குணம் தேவைப்படும். அந்த கொண்டாட்டம் இந்த சூழலில் இந்திய அணிக்கு தேவைப்படும் முக்கியத்துவத்தை காண்பிக்கிறது. அது 2 – 3 என்ற கணக்கில் இருப்பதற்கு எதிராக முன்னேறி ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை ஆட்டம் காண வைக்கும் உத்வேகத்தை கொடுக்கும்”

இதையும் படிங்க: கோலியும், கம்பீரும் செய்ஞ்சது ரொம்ப கரெக்ட்.. அடுத்த போட்டியில் இந்தியா ஜெயிக்கும் – ரவி சாஸ்திரி கருத்து

“எனவே அந்தப் கொண்டாட்டம் நியாயமானது. அது இந்திய அணியை தூக்கும். என்னைப் பொறுத்த வரை இத்தொடர் இப்போது ஒரு மட்டத்தில் உள்ளது. அதனால் இந்தியா தங்களின் ஷாட்டுகளை அழைக்கலாம். 1 – 1 என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்தத் தொடரை வெல்வதற்காக இந்தியா இங்கிருந்து எதையும் கொடுப்பார்கள். அதனால் மெல்போர்ன், சிட்னியில் நடைபெறும் அடுத்த போட்டியில் இந்தியா பவர்ஃபுல்லாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement