பும்ராவிற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சக வீரர். முதல் டி20 நடைபெற்ற சம்பவம் – என்ன நடந்தது?

Bumrah
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 24ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணியினர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தியதால் 62 ரன்கள் வித்தியாசத்திலான பெரிய வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

ishan 1

- Advertisement -

இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற அசத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த 2 அணிகள் மோத இருக்கும் 2வது டி20 போட்டி பிப்ரவரி 26ம் தேதியன்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அழகான தரம்சாலா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

பும்ராவுக்கு லஞ்சம்:
இந்த தொடரின் முதல் போட்டி உட்பட சமீப காலங்களாக டி20 கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக தரம் உயர்ந்துள்ளது. அதே தரவரிசையில் தற்போது 9வது இடத்தில் இலங்கை இருப்பதால் இந்த டி20 தொடரின் எஞ்சிய 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக லக்னோவில் நடந்த இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 199/3 ரன்கள் விளாசியது. இறுதியில் 200 பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணி இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் லக்னோவில் நடந்த முதல் போட்டியின் போது இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஸ்ரேயாஸ் அய்யர் கலகலப்பான பின்னணியை தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின்னர் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “போட்டியின் போது பந்துவீசுவதற்காக நான் கையை உயர்த்தினேன். குறிப்பாக 16வது ஓவரின் போது கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்க சென்ற போது எஞ்சிய ஓவர்களை யார் யார் வீச வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் ஜஸ்பிரித் பும்ராவிடம் தெரிவித்து விட்டுச் சென்றார்.

bumrah

அந்த சமயத்தில் பும்ராவிடம் சென்ற நான் எனக்கு பந்து வீச வாய்ப்பு வழங்குமாரு சமாதானம் செய்தேன். அதற்காக பும்ராவுக்கு லஞ்சம் கூட கொடுக்க முயன்றேன். ஆனால் இறுதிவரை என்னுடைய அந்த முயற்சி வெற்றி அடையவில்லை” என சிரித்துக்கொண்டே கூறினார்.

- Advertisement -

பகுதிநேர பவுலர்களுக்கு மவுசு:
அதாவது லக்னோவில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என தெரிந்ததால் ஓய்வு எடுப்பதற்காக கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரி எல்லை அருகே சென்றார். அதற்கு முன்பாக எஞ்சிய 4 ஓவர்களை எந்தெந்த இந்திய பவுலர்கள் வீச வேண்டும் என்ற விபரங்களையும் துணை கேப்டனாக செயல்படும் ஜஸ்பிரித் பும்ராவிடம் தெரிவித்து விட்டு அவர் சென்றதாக தெரிகிறது. ஆனால் களத்தில் கேப்டன் ரோகித் இல்லாத அந்த சமயத்தில் பந்து வீச ஒரு வாய்ப்பை பெறுவதற்காக ஜஸ்பிரித் பும்ராவை அணுகிய போதும் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என ஸ்ரேயாஸ் அய்யர் ஜாலியாக கூறியுள்ளார்.

bumrah 2

பொதுவாக களத்தில் விளையாடும் இந்திய வீரர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசிக் கொள்வது சகஜமான ஒன்றாகும். அந்த வகையில் தமக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தால் லஞ்சம் தருகிறேன் என்று கூறிய போதும் கூட அதற்கு பும்ரா சம்மதம் தெரிவிக்காமல் கேப்டன் ரோகித் சர்மா சொன்ன வேலையை கச்சிதமாக செய்து முடித்து விட்டார் என ஷ்ரேயஸ் ஐயர் கலகலப்புடன் கூறினார்.

- Advertisement -

இந்திய அணியில் தற்போது பகுதிநேர பந்துவீச்சாளர்களுக்கு கடும் பஞ்சமும் பற்றாக்குறையும் நிலவுகிறது. அதாவது ஒரு சில போட்டிகளில் முதன்மையான 5 பவுலர்கள் சொதப்பும் போது 6வதாக பந்துவீச ஒரு நல்ல பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இல்லாத காரணத்தால் சமீப காலங்களாக இந்திய அணி ஒரு சில மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே அந்த இடத்தில் தற்போது வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய 2 வீரர்களை இந்திய அணி நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

இதையும் படிங்க : உள்ளே நடந்ததை எப்படி வெளியே சொல்லலாம் – விதிமுறையை மீறிய இந்திய வீரர் மீது பிசிசிஐ நடவடிக்கை

மேலும் இப்போதெல்லாம் பந்தில் கை வைக்காமல் பேட்டிங் மட்டும் செய்வேன் என அடம்பிடிக்கும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அதன் காரணமாகத்தான் இந்திய அணியில் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள முதல் போட்டியில் பந்து வீசுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர் முயற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement