உள்ளே நடந்ததை எப்படி வெளியே சொல்லலாம் – விதிமுறையை மீறிய இந்திய வீரர் மீது பிசிசிஐ நடவடிக்கை

Ganguly
- Advertisement -

வரும் மார்ச் மாதம் முதல் இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொகாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது.

Pujara

- Advertisement -

அதில் கடந்த சில வருடங்களாக மோசமான பார்மில் தவிர்ப்பதுடன் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வரும் மூத்த அனுபவ வீரர்கள் செட்டேஸ்வர் புஜரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அவர்களுடன் நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் பிடித்து வந்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரும் நீக்கப்பட்டார்கள்.

வெடித்த சஹா சர்ச்சை:
இனி வரும் காலங்களில் இவர்கள் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் கூட இனி இந்திய அணியில் இடமில்லை என இந்திய தேர்வு குழுவினர் இவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்கும் வண்ணம் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் இந்திய அணியில் இருந்து ரித்திமான் சஹா கழற்றிவிடப்பட்டது தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனெனில் கடைசியாக கடந்த நவம்பர் மாதம் கான்பூர் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியா தவித்த போது லேசான காயம் இருந்ததையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் அரைசதம் அடித்து அசத்தினார். அதன் காரணமாக “நான் பிசிசிஐயில் இருக்கும் வரை உனக்கு இந்திய அணியில் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும்” என கூறிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தன்னம்பிக்கை வார்த்தைகளை ஊட்டியதாக சஹா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

பிசிசிஐ நடவடிக்கை:
அதே சமயம் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்து விட்டதால் இலங்கை தொடர் மட்டுமல்லாது இனி இந்திய அணியில் எப்போதுமே உங்களுக்கு வாய்ப்பில்லை என தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா கூறியது வேதனை அளித்ததாக சஹா கூறினார். அதே காரணத்திற்காக இந்திய அணியில் இடம் வகிக்கும் போதே ஓய்வு எடுக்கும் முடிவைப் பற்றி சிந்திக்குமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தம்மிடம் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Dravid

மொத்தத்தில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய முக்கிய நிர்வாகிகள் 4 சுவருக்குள் கூறிய தகவல்களை ரிதிமான் சஹா போது உலகம் வெளிப்படையாக அறியும் வண்ணம் காற்றில் பறக்கவிட்டார். இதனால் கடுப்பாகியுள்ள பிசிசிஐ தலைமை நிர்வாகம் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

விதியை மீறிய சஹா:
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் ஒவ்வொரு வருடமும் சம்பள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது குரூப் பி ஒப்பந்த அடிப்படையில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சகா 3 கோடி ரூபாய்களை சம்பளமாகப் பெற்று வருகிறார். இந்தியாவுக்காக இந்த சம்பளத்தில் விளையாடும் வீரர்கள் அதற்கு முன்பாக கையெழுத்திட்ட ஒப்பந்த விதிமுறைகளின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.

Saha

அதாவது பிசிசிஐ சம்பள ஒப்பந்த விதி முறையில் 6.3வது பிரிவில் “போட்டி, போட்டி நடுவர்கள், போட்டியின் போது நிகழும் ஒருசில முக்கிய தருணங்கள், போட்டியில் பயன்படுத்தப்படும் டெக்னாலஜி, போட்டியின் தேர்வு மற்றும் போட்டி சம்பந்தமாக இந்திய அணி நிர்வாகம் அல்லது பிசிசிஐ பற்றி எந்த ஒரு ஊடகத்திலும் சர்ச்சையான கருத்தை தெரிவிக்க கூடாது” என கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கு சம்மதம் தெரிவித்து அனைத்து வீரர்களும் கையெழுத்திட்ட பின்பு தான் இந்திய அணியில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது இந்த முக்கியமான விதிமுறையை சகா மீறியுள்ளார் என்பதால் அவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது இந்திய அணி நிர்வாகத்துக்குள் கூறப்பட்ட தகவல்களை எதனால் வெளிஉலகிற்கு கூறினீர்கள் என்பது போன்ற கேள்விகளை அவரிடம் பிசிசிஐ எழுப்ப உள்ளதாக தெரிய வருகிறது.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து மேலும் ஒரு முன்னணி வீரர் நீக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய அணியில் இடம் கிடைக்காதது பற்றி வெளியில் கூறியதற்காக இப்படி ஒரு நடவடிக்கை சஹா மீது பிசிசிஐ எடுக்கப் போகிறது என்பதை பற்றி அறிந்த இதர இந்திய வீரர்கள் இனிமேல் ஊடகங்களில் முக்கியமான விஷயங்களை பேசக்கூடாது என கலக்கம் அடைந்துள்ளார்கள்.

Advertisement