எனது ஆரம்பகால கிரிக்கெட்டில் என்னை ஆதரித்தவர் இவர்தான். அவர் இல்லனா நான் இல்ல – ஷ்ரேயாஸ் ஐயர்

Iyer-5
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக அறிமுக வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அறிமுகமான இந்த முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 13 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

Iyer-3

மேலும் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 16-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் தற்போது அவர் தனது கிரிக்கெட் கெரியரின் ஆரம்ப கால கட்டம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னுடைய கனவே நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

ஏனெனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நான் அதிகமாக விளையாடி இருந்தாலும் எனக்கு பிடித்த வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதும் அதில் முதல் போட்டியிலேயே சதம் அடித்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும். அதே போன்று கான்பூர் மைதானம் எனக்கு மிகவும் ராசியான மைதானம். ஏனெனில் என்னுடைய ரஞ்சிப் போட்டி அறிமுகமும் இங்குதான் நடந்தது.

Sky

என்னுடைய ஆரம்ப கட்டத்தில் நான் சூரியகுமார் யாதவின் தலைமையின் கீழ்தான் மும்பை அணிக்காக விளையாடினேன். என்னுடைய கரியரின் ஆரம்ப முதல் 4 போட்டியிலேயே நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து வெளியேறி விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அப்போது மும்பை அணி கேப்டனாக இருந்தபோது சூரியகுமார் யாதவ் என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்ச்சியாக விளையாட வைத்தார்.

இதையும் படிங்க : எந்த பிளேயருமே எங்களுக்கு வேண்டாம். மொத்தமாக அணியை கலைத்த – முன்னணி ஐ.பி.எல் அணி

அவரின் ஆதரவும் ஊக்கமும் என்னை சிறப்பாக விளையாட வைத்து இன்று தற்போது இந்திய அணிக்காக அனைத்து வகையான கிரிகெட்டிலும் விளையாடும் வரை கொண்டு வந்துள்ளது என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஷ்ரேயாஸ் ஐயர் பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement