- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை என்று சொன்னார்கள்.. வெற்றிக்கு பின்னர் உண்மையை சொன்ன – ஷ்ரேயாஸ் ஐயர்

இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 38.4 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

எனக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை என்று சொன்னார்கள் :

குறிப்பாக இந்திய அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் சுப்மன் கில்லுடன் நான்காவது வீரராக களமிறங்கி பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த ஜோடி 3 யாராவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 59 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக விளையாடுகிறார். அதோடு இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்ட நான்காவது இடத்திற்கு தீர்வாக கடந்த சில ஆண்டுகளாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் தான் விளையாட தேர்வு செய்யப்படவில்லை என்று ஒரு பகிரங்கமான கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னர் பிளேயிங் லெவனில் தனக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. பின்னர் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டதால் தான் நான் மீண்டும் அணிக்குள் வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது விராட் கோலிக்கு பதிலாக தான் அவர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. முன்னதாக ஜெய்ஸ்வால் விராட் கோலிக்கு பதிலாக களமிறங்கியதாக பார்க்கப்பட்ட வேளையில் ஜெய்ஸ்வால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதாகவும் அதனால் தனக்கு வாய்ப்பு இல்லை என்று நினைத்ததாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதையும் படிங்க : நான் ஒன்னும் அதுக்காக அவுட் ஆகல.. போட்டி முடிந்த பின்னர் சமாளித்து பேசிய – சுப்மன் கில்

கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 2023 உலக கோப்பை தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திருந்தார். இப்படி சிறப்பாக செயல்படும் ஒரு வீரரை எவ்வாறு இந்திய அணி சேர்க்கவில்லை என்று கூறுகிறது என்று ரசிகர்களும் அவரது இந்த கருத்திற்கு விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -