இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்று கோடிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய வேளையில் வெறும் 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நான் ஒன்னும் அதுக்காக அவுட் ஆகல :
நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்திய அணிக்கு 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 96 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரால் ஆட்டமுழக்காமலே போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்க முடியும் நிலை இருந்தது.
ஆனால் இந்திய அணி இலக்கை நெருங்கிய வேளையில் தான் சதத்தை தவற விட்டுவிடுவோமோ என்ற பதட்டத்திலேயே பெரிய ஷாட் அடிக்க முற்பட்டு சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். இதனால் அவர் மீது பெரிய விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்கிற போது சுப்மன் கில்லின் சதத்திற்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த நேரத்தில் ஹார்டிக் பாண்டியா ஒரு சிக்சர் அடிக்கவே தானும் சதத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதனால் அடுத்த ஓவரிலேயே ஒரு பவுண்டரி அடித்த கில் பெரிய ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்தவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுப்மன் கில் கலந்து கொண்ட போது : நீங்கள் சதம் அடிப்பதற்காகத்தான் அந்த ஷாட்டை ஆடி ஆட்டமிழந்தீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க : உண்மையிலேயே இதை நெனச்சா ஏமாற்றமா தான் இருக்கு.. தோல்விக்கு பின்னர் ஜாஸ் பட்லர் வருத்தம் – விவரம் இதோ
அதற்கு பதிலளித்த சுப்மன் கில் கூறுகையில் : நான் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த ஷாட்டை விளையாடவில்லை. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த நினைத்தேன். வெற்றிக்கு 40 முதல் 50 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தாலும் அப்படி ஒரு ஷாட்டை ஆடி இருப்பேன் நாட்டுக்காக போட்டியை வெல்வது தான் முக்கியம் என்று கில் சமாளித்தது குறிப்பிடத்தக்கது.



