இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது ஏற்கனவே இங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து நேற்று நாக்பூர் நகரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.
நாங்கள் தோல்வியை சந்திக்க இதுவே காரணம் :
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்ட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது.
பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : உண்மையிலேயே நாங்கள் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில் இந்த போட்டியின் போது நாங்கள் மிகச் சிறப்பாக ஆட்டத்தை துவங்கி இருந்தோம்.
ஆனால் பவர்பிளே ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியாமல் போனது. இந்த போட்டியில் மேலும் ஒரு 40 முதல் 50 ரன்கள் அடித்திருந்தால் வெற்றிக்கு சாதகமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக எங்களை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.
இதையும் படிங்க : 6000 ரன்ஸ் 600 விக்கெட்ஸ்.. ஜேம்ஸ் ஆண்டர்சனை முந்திய ரவீந்திர ஜடேஜா.. வரலாற்று சாதனை
அதேபோன்று இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது பார்ட்னர்ஷிப் போட்டியை எங்களிடம் இருந்து பறித்தது. இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் இந்த தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக் கொடுத்து அடுத்த போட்டியில் பலமாக திரும்பவும் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.



