விராட் கோலி, ரிஷப் பண்ட், சுப்மன் கில் வரிசையில் மோசமான சாதனையை சமன் செய்த – ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer Captain
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த உலக கோப்பையையும் வெற்றி பெற்று அசத்தியது. அதனை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் 2026 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தனர்.

மோசமான சாதனையை சமன் செய்த ஷ்ரேயாஸ் ஐயர் :

இவ்வேளையில் 2028 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை பி.சி.சி.ஐ எடுக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்த வகையில் 2026 டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி இருந்தாலும் சூரியகுமார் யாதவின் வயது மற்றும் பேட்டிங் பார்ம் ஆகியவற்றை காரணமாக காட்டி அவர் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக நேற்று தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக பங்கேற்று இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தது. அதிலும் குறிப்பாக அயர்லாந்து அணியிடம் முதல் முறையாக இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது.

இப்படி முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியை சந்தித்த வேளையில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மோசமான சாதனை ஒன்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : ஏற்கனவே இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்று முதல் போட்டியில் தோல்வியை கண்ட இந்திய கேப்டன்களாக விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த வரலாற்று வெற்றிக்கு காரணம் இதுதான் – அயர்லாந்து கேப்டன் மகிழ்ச்சி

இவ்வேளையில் இவர்களது வரிசையில் நான்காவது இந்திய கேப்டனாக தான் கேப்டனாக விளையாடிய முதல் டி20 போட்டியிலேயே தோல்வியை சந்தித்த இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை சுப்மன் கில் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement