IND vs RSA : நான் பவுலரை பாத்து பயப்பட மாட்டேன். நான் நம்புறது இதை மட்டும் தான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Shreyas-2
- Advertisement -

இந்திய அணியின் இளம் முன்னணி வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள், 28 ஒருநாள் போட்டிகள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்கு நீண்ட ஆண்டுகளாகவே நான்காவது இடத்தில் இறங்கும் வீரர் யார் என்ற கேள்வி தொடர்ந்து வந்த வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் நிரந்தர நான்காவது வீரராக இருப்பார் என்று கூறப்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவியின் வருகை அவரது இடத்தை தற்காலிகமாக பறித்தது என்றே கூறலாம்.

Ishan-Kishan

- Advertisement -

ஏனெனில் தற்போதெல்லாம் இந்திய அணியின் நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவே தொடர்ந்து இறங்கி வருகிறார். அதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தான் எந்த அளவிற்கு திறமையான பேட்ஸ்மேன் என்பதை ஷ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலும் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றிருந்தார்.

Shreyas Iyer VS RSA

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : நான் பேட்டிங் செய்ய களம் புகுந்த சிறிது நேரத்தில் மைதானம் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருப்பதை உணர்ந்தேன். ஆனாலும் சற்று நிதானமாக பேட்டிங்கை துவங்கினால் நிச்சயம் பிறகு மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்று உணர்ந்தேன்.

- Advertisement -

அதன்படி நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டும் என்று நானும் இஷான் கிஷனும் பேசிக்கொண்டோம். அதனால் என்னால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடிந்தது. அதோடு நான் எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் எனது திட்டங்களையும் மாற்ற மாட்டேன். அவர்களுக்கு எதிராக பயப்படவும் மாட்டேன்.

இதையும் படிங்க : அசத்திய ஸ்கை, டி20 உ.கோ முதல் பயிற்சி போட்டியில் இந்தியா தடுமாற்ற வெற்றி – மொத்த விவரம் இதோ

என்னுடைய உள் உணர்வு என்ன சொல்கிறதோ அதை வைத்து தான் நான் விளையாடுவேன், அதை மட்டும் தான் நான் நம்புவேன் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது. ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நேற்றைய போட்டியில் முன்கூட்டியே ஆட்டம் இழந்து இருந்தால் இந்திய அணி தோல்வியை கூட சந்தித்திருக்கலாம் என்பது நிதர்சனமான உண்மை.

Advertisement