ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையால 4-5 மாசம் விளையாடவே முடியாது – வெளியான மருத்துவ அறிக்கை

Shreyas-Iyer
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலி ஏற்பட்டதாக அணி மருத்துவர்கள் இடம் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அந்த டெஸ்ட் போட்டியின் கடைசி இரண்டு நாட்கள் போட்டியில் பங்கேற்காத அவரை அணியின் மருத்துவக் குழு ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றது. அதன்பின்னர் அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள அசவுகரியம் காயமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியது.

Shreyas-Iyer

- Advertisement -

பின்னர் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யும் அறிவித்தது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் நான்காவது வீரராக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒருவார சிகிச்சைக்குப் பின்பு வெளியான மருத்துவ அறிக்கையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள காயம் தற்போது தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு சிறிய அளவிலான ஒரு அறுவை சிகிச்சையை முதுகில் செய்ய வேண்டும் என்றும் அந்த அறுவை சிகிச்சையை செய்தால் குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

Shreyas Iyer 1

இதன் காரணமாக அவர் அடுத்த 6 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் அந்த மருத்துவ தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இம்மாத இறுதியில் துவங்கும் ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் அவரால் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை கொண்டு பும்ரா மற்றும் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வரும் வேளையில் தற்போது அவர்களுடன் ஷ்ரேயாஸ் ஐயரும் விளையாட முடியாத சூழ்நிலை சந்தித்துள்ளது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : ஐசிசி உ.கோ 2023 : சென்னையில் மேட்ச் இருக்கா? துவங்க மற்றும் ஃபைனல் தேதி, மைதானங்கள் பற்றி வெளியான அறிவிப்பு இதோ

பொதுவாகவே முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அந்த காயத்திலிருந்து மீண்டு வர பலரும் கஷ்டப்பட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். அந்தவகையில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயரும் அந்த பிரச்சனையில் சிக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement