ஐசிசி உ.கோ 2023 : சென்னையில் மேட்ச் இருக்கா? துவங்க மற்றும் ஃபைனல் தேதி, மைதானங்கள் பற்றி வெளியான அறிவிப்பு இதோ

World
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. என்ன தான் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்தாலும் 50 ஓவர் போட்டிகளை மையப்படுத்திய இந்த உலகக் கோப்பை தான் கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் தொடராக ரசிகர்களாலும் வல்லுனர்களாலும் கொண்டாடப்படுகிறது. வரலாற்றில் 13வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, உலகக் கோப்பையின் வெற்றிகரமான அணியான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் டாப் அனைத்து கிரிக்கெட் அணிகளும் களமிறங்குகின்றன.

worldcup

- Advertisement -

அதே போல் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011க்குப்பின் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. குறிப்பாக 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி இம்முறை சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி இந்த தொடரில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தேதிகள், மைதானங்கள்:
முன்னதாக 2011ஆம் ஆண்டு வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடனும் 1987 மற்றும் 1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் போன்ற இதர ஆசிய நாடுகளுடனும் இணைந்து உலக கோப்பையை நடத்திய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் தான் முழுமையாக தங்களது நாட்டில் தன்னிச்சையாக நடத்துகிறது. அதனால் இந்தியா மட்டுமல்லாது உலகின் இதர டாப் அணிகள் பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் கண்டு ரசிக்கும் அற்புதமான வாய்ப்பும் இந்திய ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

Worldcup

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை நடைபெறும் மைதானங்கள் மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய அறிவிப்பு பிரபல இஎஸ்பிஎன்க்ரிக்இன்போ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி வரும் அக்டோபர் 5ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கும் இந்த உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் நவம்பர் 19ஆம் தேதியன்று குஜராத்தில் 1,30,000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மொத்தம் 46 நாட்கள் ஃபைனல் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும் இந்த தொடரின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகள் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்திலும் பெங்களூரு, டெல்லி, தரம்சாலா, கௌஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர் ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய மைதானங்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ahmedabad Motera Cricket Stadium ground

அது போக இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பங்கேற்கும் பயிற்சி போட்டிகள் நடைபெறும் மேலும் சில மைதானங்களை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பற்றிய இறுதி முடிவுக்கு வந்ததும் பிசிசிஐ உறுதிப்படுத்த உள்ளதாக தெரிய வருகிறது. அதாவது 2016 டி20 உலக கோப்பை, 2021 டி20 உலக கோப்பை மற்றும் 2023 உலகக் கோப்பை ஆகிய 3 தொடர்களை நடத்துவதற்கு ஐசிசி செலுத்த வேண்டிய வரியை பிசிசிஐ இந்திய அரசுக்கு செலுத்தும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொடுத்தது.

- Advertisement -

எனவே அது பற்றி ஐசிசியுடன் இறுதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாமதம் ஏற்படுவதாலும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வருவதற்கு தேவையான விசாவை வழங்குவதற்கு தேவையான செயல்பாடுகளை முடிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த இரண்டும் முடிந்தவுடன் ஒட்டுமொத்த மைதானங்கள் மற்றும் அட்டவணை பற்றிய அறிவிப்பை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

Chepauk

இதையும் படிங்க:IND vs AUS : சென்னை போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் – போட்டி தடையின்றி நடக்குமா?

இருப்பினும் மேல குறிப்பிடப்பட்ட முக்கிய நகரங்களில் வரலாற்றில் பலமுறை ஐசிசி தொடர்களின் முக்கிய போட்டிகள் நடைபெற்றுள்ளதால் அந்த மைதானங்களும் தேதிகளும் 99% உறுதி என்றே சொல்லலாம். அந்த வகையில் 2016ஆம் ஆண்டு 3 ஸ்டேண்ட் மூடப்பட்டிருந்ததால் டி20 உலக கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழந்த சென்னையில் 2011க்குப்பின் 12 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement