IND vs AUS : சென்னை போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் – போட்டி தடையின்றி நடக்குமா?

Chepauk Chennai Cricket Stadium
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரானது சமநிலையில் உள்ளதால் இன்று நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தத் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றுவதோடு சேர்த்து ஐ.சி.சி ஒருநாள் அணிகளின் தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கும்.

IND-vs-AUS-1

- Advertisement -

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏற்கனவே இரண்டாவது போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி அவர்களை மனதளவில் பாதித்துள்ளதால் மூன்றாவது போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் உலக கோப்பை தொடர்க்கு முன்னதாக இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றினால் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்பதனால் ஆஸ்திரேலியா அணியும் இந்து வெற்றிக்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக அமைய வாய்ப்புள்ளது.

Chepauk

இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி நடைபெற்று முடியுமா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டிக்கு முன்னர் மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஆனால் அங்கு மழை ஏதும் பெய்யாமல் போட்டி திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு தகவலில் புதன்கிழமை அன்று சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணி தப்பா யூஸ் பண்ணிட்டாங்க, நீடித்து விளையாட இனியாவது அந்த முடிவை எடுங்க – பும்ராவுக்கு அக்தர் ஆலோசனை

மேலும் ஓரிருமுறை மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement