இந்திய அணி தப்பா யூஸ் பண்ணிட்டாங்க, நீடித்து விளையாட இனியாவது அந்த முடிவை எடுங்க – பும்ராவுக்கு அக்தர் ஆலோசனை

Akhtar
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக போட்டியின் முக்கியமான நேரங்களில் யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் 2022 ஜூலை மாதம் நிகழ்ந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்தார்.

Bumrah

- Advertisement -

அது 2022 ஆசிய கோப்பையில் தோல்வியை கொடுத்த நிலையில் 2022 டி20 உலக கோப்பையில் எப்படியாவது விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் முழுமையாக குணமடையாமல் வந்த அவர் மீண்டும் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினார். அந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் குணமடைந்த பும்ரா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று அறிவித்த பிசிசிஐ அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக மீண்டும் விலகுவதாக அடுத்த நாளே அறிவித்தது.

தப்பா யூஸ் பண்ணிட்டீங்க:
அந்த நிலையில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வெளியேறிய அவர் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் பெரிய அளவில் இருப்பதால் 2023 ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து விலகியுள்ள பும்ரா வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வித்தியாசமாக பந்து வீசுவதே பும்ரா முதுகு பகுதியில் இவ்வளவு பெரிய காயத்தை சந்திப்பதற்கு காரணமென்று தெரிவிக்கும் சோயப் அக்தர் அவரை அனைத்து போட்டிகளிலும் பயன்படுத்தி இந்திய அணி நிர்வாகமும் தவறு செய்து விட்டதாக விமர்சித்துள்ளார்.

Bumrah

மேலும் இதிலிருந்து விடுபட ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதுடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடாமல் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் விளையாடினால் மட்டுமே பும்ரா நீண்ட நாட்கள் நிலைத்து விளையாட முடியும் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் ப்ஃரண்ட் ஆக்சனை கொண்டுள்ளார். அதனால் பந்தை வீசுவதற்கு தன்னை அவர் லோடிங் செய்யும் போது முதுகு தண்டில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறார். ஆனால் நாங்கள் அந்த அழுத்தத்தை பக்கவாட்டு பகுதியில் பயன்படுத்துவோம். குறிப்பாக என்னை போன்ற பவுலர் அந்த அழுத்தத்தை ஈடு செய்வதற்கான உதவிகளை இடுப்பு, தொடைகள் மற்றும் இடது கையலிருந்து பெறுவேன். துரதிஷ்டவசமாக பும்ராவுக்கு அந்த செல்வாக்கு இல்லை. ஏனெனில் அவர் வீசும் பவுலிங் ப்ஃரண்ட்-ஆன் ஆக்சன் அழுத்தத்தை ஈடு செய்வதற்கு எந்த வழியையும் கொடுப்பதில்லை”

Bumrah 1

“அதனால் நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அந்த அழுத்தத்திலிருந்து எஸ்கேப் ஆக முடியாது. போதாக்குறைக்கு அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடுவது அவரை மேலும் உடைக்கும். குறிப்பாக அவர் 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடி ஐபிஎல் தொடரிலும் முழுமையாக விளையாடுகிறார். ஆனால் அவருடைய பவுலிங் ஆக்சன் அதற்கு எந்த வகையிலும் பொருந்தாது. துரதிஷ்டவசமாக அதை புரிந்து கொள்ளாமல் இந்திய அணி நிர்வாகமும் அவரை சரியாக கையாளவில்லை என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

“சொல்லப்போனால் அவரும் இதை உணர்ந்து எந்த வகையான கிரிக்கெட்டில் நாம் விளையாடலாம் எதை தவற விடலாம் என்று விழிப்புணர்வுடன் இல்லாமல் இருந்து விட்டார் எனவே இந்த சமயத்தில் நான் இந்திய அணி நிர்வாகத்தில் இருந்தால் நீங்கள் 5 ஒருநாள் போட்டிகளில் மூன்றில் மட்டும் அதுவும் முக்கியமான போட்டிகளில் விளையாடுங்கள் என்று பும்ராவிடம் சொல்வேன். குறிப்பாக அதிக பயிற்சிகளும் குறைவான போட்டிகளும் தான் அவருடைய கேரியரை நீட்டிப்பதற்கான ஒரே வழியாகும்”

Shoaib Akhtar

இதையும் படிங்க:சூரியகுமார் யாதவ் விஷயத்தில் நாம செய்யவேண்டியது இது ஒன்னு மட்டும் தான் – ராகுல் டிராவிட் வெளிப்படை

“மேலும் அவருடைய பின்பக்கத்தில் நிறைய தசைகள் உருவாக வேண்டும். இந்த ஆக்சனை வைத்து அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் உங்களால் அதை மாற்ற முடியாது. மொத்தத்தில் மிகவும் தைரியமான பவுலரான அவர் இந்த கடினமான தருணத்தில் தவிப்பது எனக்கு சோகத்தை கொடுத்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என கூறினார்.

Advertisement