சூரியகுமார் யாதவ் விஷயத்தில் நாம செய்யவேண்டியது இது ஒன்னு மட்டும் தான் – ராகுல் டிராவிட் வெளிப்படை

Rahul-Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டி அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் :

IND-vs-AUS

- Advertisement -

அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக நாம் உள்ளூரில் 9 போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது. அதில் எட்டு போட்டிகளில் வெற்றிகரமாக விளையாடி முடித்து விட்டோம். இன்னும் இந்த ஒரு போட்டியில் விளையாடிய பின்னர் நமக்கு நல்ல தெளிவு கிடைக்கும். அதனை தொடர்ந்து அணியை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவின் வெவ்வேறு 9 நகரங்களில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு நகரங்களுக்குமான சீதோஷ்ன நிலை என்பது வித்தியாசமாக இருக்கும் என்பதனால் நாம் சரியாக விளையாட வேண்டியது அவசியம். ஏனெனில் எந்தெந்த மாற்றங்களை செய்யலாம், எப்படி அணியை வலுப்படுத்தலாம் என்பது குறித்த திட்டங்களை சரியான வகையில் நாங்கள் கட்டமைக்க உள்ளோம். மேலும் இந்திய அணிக்கு தற்போது 17-18 வீரர்களை அடையாளம் கண்டு விட்டோம். அதில் சிலர் காயத்திலிருந்து மீண்டுவர வேண்டிய உள்ளது.

Sky-1

ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாமல் போனது துர்திஷ்டவசமானது. அவருக்கு தான் நான்காவது இடத்தில் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் இல்லாத வேளையில் சூரியகுமார் யாதவ் அந்த இடத்தில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் என்றாலும் அவரது பார்ம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர் இரண்டு போட்டிகளிலுமே நல்ல பந்தில் தான் ஆட்டமிழந்துள்ளார்.

- Advertisement -

தற்போதைக்கு சூரியகுமார் யாதவிற்கு நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும். போதுமான வாய்ப்புகளை வழங்கி பொறுமை காக்க வேண்டியது மட்டும் தான் நாம் செய்ய வேண்டியது. நிச்சயம் அவர் நல்ல நிலையை எட்டுவார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் நிறைய விளையாடியிருக்கிறார். அதேபோன்று ஐபிஎல் போட்டியிலும் சரி, உள்ளூர் போட்டியிலும் சரி பத்து ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும் அவர் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

இதையும் படிங்க : ஏபிடி, தோனி என்னுடைய சிறந்த ரன்னிங் பார்ட்னர்ஸ் ஆனா அவர் ரொம்ப மோசமானவர் – இந்திய வீரர் பற்றி விராட் கோலி

தற்போது தான் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார். அவரது பார்ம் குறித்து யோசிக்காமல் தற்போது அவரது விஷயத்தில் நாங்கள் பொறுமை காக்க இருக்கிறோம் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement