சச்சின், சேவாக் வரிசையில் விசித்திர பட்டியலில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர் – ஓ இதுல இப்படி மேட்டர் இருக்கா?

Shreyas-1
Advertisement

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகின்றன. மார்ச் 12-ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

agarwal 2

அதன்படி அகர்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த டெஸ்ட் போட்டியில் அகர்வால் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சொந்த மைதானத்தில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் ரோகித் சர்மாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மிடில் ஆர்டரில் விஹாரி மற்றும் கோலி ஆகியோர் சற்று அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

- Advertisement -

இருப்பினும் விஹாரி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேற பின்னர் கோலி 23 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இப்படி மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் அனைத்து வீரர்களுடனும் தனது பங்களிப்பை சிறப்பாக அமைத்து இறுதிவரை களத்தில் நின்று கடைசி ஆளாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

shreyas iyer

இன்றைய போட்டியில் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி நபராக ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் அய்யர் 98 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி 4 சிக்சர்கள் என 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து தற்போது இலங்கை அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு கட்டத்தில் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் நிச்சயம் எப்படியாவது சதம் விளாசி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் 92 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அதிர்ஷ்டம் இன்றி ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விசித்திரமான ஒரு பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்திய பேட்ஸ்மேன்கள் 90 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்திருந்தபோது ஸ்டம்பிங் ஆகி அவுட் ஆனவர்களின் பட்டியலில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : என்ன ஒரு மனசு ! வெற்றிக்கு பின் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் – குவியும் பாராட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 ரன்களுக்கு மேல் ஸ்டம்பிங் ஆனவர்களின் பட்டியல் இதோ :
1987 ஆம் ஆண்டு – வெங்சர்க்கார் 96 ரன்கள்
2001 ஆம் ஆண்டு – சச்சின் டெண்டுல்கர் 90 ரன்கள்
2010 ஆம் ஆண்டு – விரேந்திர சேவாக் 99 ரன்கள்
2022 ஆம் ஆண்டு – ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள்

Advertisement