ஆஸிக்கு எதிரான மேட்ச் மாதிரியே இருந்துச்சு.. முதல் உ.கோ சதமடிக்க காரணம் அது தான்.. ஆட்டநாயகன் ஷ்ரேயாஸ் பேட்டி

Shreyas Iyer Press
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 9 லீக் போட்டியிலும் 9 வெற்றிகளை பெற்றுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 411 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, ராகுல் 102 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்தனர். அதனால் உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் டாப் 5 வீரர்களும் 50+ ரன்களை அடித்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. அதைத்தொடர்ந்து சேசிங் செய்த நெதர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் 47.5 ஓவரில் 250 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஸ்ரேயாஸின் பயிற்சி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமன்ரு 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், ஜடேஜா, பும்ரா, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வகையில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை காண்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்த பின் தம்முடைய விக்கெட்டை பரிசளித்தது போல் இம்முறை தவறு செய்யவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகமாக மைதானத்தின் நேரான திசைகளில் பெரிய ஷாட் அடித்து ரன்கள் குவிக்க தேவையான பயிற்சிகளை எடுத்ததே 128* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி ஆட்டநாயகன் விருது வெல்ல உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனக்கு இது ஏற்கனவே நடந்தது போல் தோன்றியது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நடைபெற்றது. ஆனால் இம்முறை நான் விக்கெட்டை பரிசளிக்கவில்லை”

- Advertisement -

இதையும் படிங்க: ரொம்ப நாளா அதை செய்யணும்னு நினைச்சோம்.. நாக் அவுட் முன்னாடி செஞ்சுட்டோம்.. ரோகித் சர்மா பேட்டி

“ஏனெனில் இம்முறை நான் கடைசி வரை அவுட்டாகாமல் வெளியே வர விரும்பினேன். அதற்கிடையே காயங்களை சந்தித்தும் தேவையான முதலுதவி மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். சமீபத்திய போட்டிகளில் அடித்த ரன்கள் இன்று எனக்கு உதவியது. பிட்ச் 2 விதங்களில் இருந்த நிலையில் நான் என்னுடைய நல்ல துவக்கத்தை சரியாக பயன்படுத்த விரும்பினேன். மேலும் நேராக அடிப்பதற்கு நான் சில பயிற்சிகளை எடுத்தேன். அதனால் இப்போட்டியில் அதிகம் நேராக அடிக்க முயற்சித்தேன். குறிப்பாக தலையை நேராக வைத்து பந்தை பின்பற்றி ஸ்லாக் ஷாட்டை அடித்தேன்” என்று கூறினார்.

Advertisement